மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 1 March 2020

எண்ணம் போல் வாழ்க்கை.

Don′t forget the old situation!

       Once upon a time, the king who ruled a country had a prudent minister. The king, wherever he goes, takes him. He does everything on his advice. Thus, the minister′s popularity spread throughout the country. Some saw this and became envious of the minister.

     Wherever the minister goes, it is usual to carry a box with him. The jealous ones keep this, the King, minister pretends to be good and deceives us. He stole all the expensive things in the palace and put it in his box.

     Check it out. The king, too, had little doubt. One day while hunting, the minister brought the box with him as usual. What′s in the box?, the king asked. Immediately, the minister opened the box, and there was a rag cloth worn by a shepherd. What is all this?, the king asked with surprise.

    King! While the sheep were grazing, you made me a minister, looking at my intelligence. With such a high ranking, some people forget the old status. I don′t have a mind to be that. The minister said that he would like to be in the minister position by carring the old situation. The king honored the minister by presented many gifts. The jealous people regretted that the maneuver they had caused their downfall.

Moral of the story : 
      Life is like a intention.
📻📻📻📻📻📻
    முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அரசர், எங்கு சென்றாலும், அவரை அழைத்துச் செல்வார். அவரின் ஆலோசனைப் படியே அனைத்தையும் செய்வார். இதனால், மந்திரியின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர்.

   மந்திரி எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே, அரசே மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் திருடி தன் பெட்டியில் வைத்துள்ளார்.

   அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர். அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது. இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர்.

   அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் இல்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன் என்றார் மந்திரி. மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.

கதையின் கருத்து : 
     எண்ணம் போல் வாழ்க்கை.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

Pages