டெவில்ஸ் கெட்டில் நீர்வீழ்ச்சி!!
🏕🏞🏝🏜
சில சமயங்களில் மக்களுக்கு எழும் சிக்கலான கேள்விகளுக்கும், நம்மை சுற்றி நிகழும் மர்மமான நிகழ்வுகளுக்கும் அறிவியலால் மட்டுமே இதுவரை நம்பகமான விடையை கொடுக்க முடிந்துள்ளது.
ஆனால், அறிவியலாலும் விடைகாண முடியாத சில இயற்கை நிகழ்வுகளும், சம்பவங்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி அறிவியலாலும் விடைகாண முடியாத ஓர் அதிசய நிகழ்வை பற்றிதான் நாம் இங்கு காணப்போகிறோம்.
நாம் இருக்கும் பகுதிகளில் நிறைய அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை பார்த்திருப்போம். பலவற்றை கண்டு வியந்தும் இருக்கின்றோம்.
பொதுவாக உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சி ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து சிறிது தூரம் ஓடி பின் ஆறுகளிலேயோ அல்லது கடலிலேயோ கலந்துவிடும்.
ஆனால், நாம் இங்கு காணவிருக்கும் நீர்வீழ்ச்சியின் நீரானது கடைசியில் எங்கு செல்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள டெவில்ஸ் கெட்டில் என அழைக்கப்படும் அசாதாரணமான நீர்வீழ்ச்சி தான் அது.
இப்பகுதியில் இருந்து விழும் இரட்டை அருவிகளில் ஒன்று, அருகில் உள்ள பிரவுன் என்ற ஆற்றுடன் கலந்துவிட்டாலும், இன்னொரு பகுதியில் விழும் அருவியானது ஒரு குழியில் மட்டுமே விழுந்து முற்றிலும் காணாமல் போகிறது.
இப்படி குழியில் விழும் நீர் கடைசியில் எங்குதான் செல்கிறது என்பதை கண்டுபிடிக்க பலவிதமான கண்காணிப்பு (Traking) கருவிகளை கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்டபோதும் அதன் முடிவுப்பகுதியை காண இயலவில்லை.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி எரிமலை குழம்புகளுக்கு உட்பட்ட பகுதியாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுவதால், அருவியிலிருந்து விழும் நீரானது பூமியின் அடிப்பகுதியில் சென்று விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என யூகித்துள்ளனர்.
எனினும், இந்த நீர்வீழ்ச்சி விழும் இடத்திற்கான விடையை இன்னும் அறிவியலாலும் கண்டுபிடிக்க இயலாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
🗻🌊🌊🌊🌊🌊💧