மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 7 March 2020

நமஇவெயா _ மந்திர வார்த்தை

நம்பிக்கை..!

 ஒரு நாள் சுந்தர் என்ற இரண்டு நண்பர்கள் வேலை சம்மந்தமாக பக்கத்து ஊருக்கு சென்றார்கள். அப்போது, இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டது. இருந்தாலும் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள். 


       ஒரு மரத்தில் ஏறி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த சமயத்தில், அவர்கள் எதன்மீதோ கால்தடுக்கி எப்படியோ உருண்டு ஆழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை. ஆனால், மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. 

     கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே துணையாக இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள். விடிந்த பிறகு வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது.

   ஏனென்றால், அவர்கள் நினைத்ததைவிட கிணறு மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதிலிருந்து ஏறி வர எந்தப் பிடிப்போ, படிகளோ எதுவுமே இல்லை. சேறும் சகதியும் நிறைந்திருந்ததால், அதிலிருந்து வெளியேறுவது கடினமாக இருந்தது. 

     அதனால், சுந்தர் மிகவும் சோர்ந்து போனார். ஆனால், சிவா சற்று நேரம் அமைதியாக தியானத்தில் அமர்ந்தார். பிறகு யோசிக்க ஆரம்பித்தார். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவர் கண்ணில்பட்டது. 

    அதைப் பார்த்ததும், சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கி, அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்தார். அந்தக் கல்லால் வேரைத் தட்டித்தட்டி சிறு மூங்கில் கழி போல் இரு துண்டுகளாக வெட்டி எடுத்தார். 

   இந்த வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம் என்று சுந்தரை அழைத்தார். ஆனால் அவர் பயந்து நடுங்கி வர மறுத்துவிட்டார். சிவாவிற்கு அவரைச் சுமந்து கொண்டு வெளியேறுவது முடியாத விஷயம். அதே சமயம் நண்பனை கிணற்றுக்குள்ளேயே விட்டுவிட்டுப் போகவும் முடியாது. 

    அதனால், சிவா ஒரு சில நிமிடங்கள் யோசித்து, பின் சுந்தரிடம் எனக்கு ஒரு மந்திர வார்த்தை தெரியும். அதைச் சொன்னால் எந்தவித பயமும் வராது. அதைத்தான் நான் இவ்வளவு நேரம் சொல்லி தியானம் செய்தேன். நீயும் சொல். உனக்கும் அச்சம் இருக்காது. சுலபமாக நாம் வெளியேறிவிடலாம் என்றார்.

     அதைக் கேட்டதுமே சுந்தர் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. அவசர அவசரமாக என்ன மந்திரம் அது, சொல் என்றார். உடனே சிவா நமஇவெயா என்று கூறினார். நமச்சிவாய தெரியும்.. இது என்ன நமஇவெயா... ? என்று சுந்தர் கேட்டார்.

   உனக்கு கிணற்றை விட்டு வெளியேற ஆசை இருக்கிறதா இல்லையா? என்று சிவா கேட்டதும், இருக்கிறது என்று சுந்தர் கூறினார். அப்படியானால் கேள்வி எதுவும் கேட்காமல் மந்திரத்தைச் சொல் என்று சிவா கூறினார்.

    அதனால், சுந்தரும் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார். உடனே அவர் மனதிலும் நம்பிக்கை உண்டானது. பிறகு இருவரும் சிரமப்பட்டு வெளியில் வந்தார்கள். சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவர்கள் பயணம் தொடர்ந்தது. 

     வழியில் சுந்தர், சிவாவிடம் எனக்குத் தெரியாமல் நீ எப்போது மந்திர தந்திரங்களைக் கற்றாய்? நீ சொன்ன மந்திர வார்த்தையைச் சொன்னபோது எனக்குள் ஒருவித ஆற்றல் பொங்கி எழுந்தது. அபூர்வமான இந்த மந்திரத்தைப்போல் இன்னும் ஏதாவது உனக்கு தெரியுமா? அவற்றையும் சொல்லித் தருகிறாயா? என்று கேட்டார். 

      அதற்கு சிவா, சிரித்துக் கொண்டே, நண்பா என்னை மன்னித்துவிடு. எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது. நான் உனக்கு சொல்லித் தந்தது மந்திர வார்த்தை இல்லை. உன் மனதில் இருந்த எதிர்மறை எண்ணத்தை வெளியே தள்ளி, நீ நம்பிக்கையுடன் செயல்பட உதவி செய்தேன். 

     நீ சொன்ன மந்திர வார்த்தை.... நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும் (நமஇவெயா) என்ற வார்த்தையின் முதல் எழுத்துக்கள்தான் என்று கூறினார். 

🌹🌹🌹🌹🌹🌹
www.alamaravizhuthugal.net
🚀🚀🚀🚀🚀🚀

Pages