மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 10 April 2020

பொறுமையே சிறந்தது.

Buffalo′s Patience..!!

     There lived a buffalo with a mischievous monkey in the forest. Every day, the monkey used to trouble the buffalo either by pulling his tail, throwing nuts on his head or jumping on his back from the tree. The buffalo was fed up of monkey′s prank, but he still dealt with patience.

      The other animals of the forest saw this and thought why the buffalo tolerated all the mischief. The elephant went to the buffalo and asked, "Why don′t you teach a lesson to the monkey for his mischiefs?" the buffalo smiled at the elephant and replied, I am thankful to the monkey for teaching me how to be patient.

       The monkey who was sitting on the top of the tree, heard this and felt ashamed. The monkey immediately came down to the buffalo and said, "Sorry, my dear friend for all the trouble that I gave you". The buffalo smiled at the monkey and they became good friends.

Moral of the story : We should have patience.

      காட்டில் குரங்குடன் எருமை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும், குரங்கு எருமையின் வாலை இழுத்தும், எருமையின் தலையில் கொட்டைகளை எறிந்தும், மரத்தில் இருந்து எருமை மீது குதித்தும் எருமையை தொந்தரவு செய்து வந்தது. எருமை குரங்கின் குறும்பை கண்டு மிகவும் ஆத்திரமடைந்தது, ஆனாலும் எருமை பொறுமையாக இருந்தது. 

      காட்டில் உள்ள மற்ற விலங்குகள் எல்லாம் எருமை ஏன் இவ்வளவு சகித்து கொள்கிறது என்று நினைத்தன. யானை எருமையிடம் சென்று ஏன் நீ குரங்கின் சேட்டைகளுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்கக்கூடாது? என்று கேட்டது. எருமை சிரித்துக் கொண்டே 'நான் எவ்வாறு பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை குரங்கு எனக்கு கற்றுத் தருகிறது" எனவே நான் அதற்கு நன்றியுள்ளவனாய் இருக்க வேண்டும் என்று பதிலளித்தது. 

    இதையெல்லாம் மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்த குரங்கு, கேட்டு மிகவும் வெட்கமடைந்தது. குரங்கு உடனடியாக எருமையிடம் வந்து, 'நான் உங்களுக்கு கொடுத்த எல்லா தொந்தரவுகளுக்கும் என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறியது. எருமை ஏற்றுக் கொண்டது. அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

நீதி : பொறுமையே சிறந்தது.

Pages