அனைவரும் எங்கேயாவது வார்லி ஓவியத்தைப் பார்த்திராமல் இருக்கமுடியாது. இந்தியாவின் பிரசித்து பெற்ற பழங்குடி ஓவியங்களுள் ஒன்று வார்லி. வார்லி ஓவியக் கலை இரண்டாயிரம் வருஷத்துக்கு மேற்பட்ட தொன்மையுடையது. மனிதன் குகைகளை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் அன்றாட நிகழ்வுகளை, சடங்குகளை அறிவிக்கும் வகையில் வரையப்பட்ட ஓவியங்களே வார்லி ஓவியங்கள்.
இதன் வயது கி.மு. 2500 முற்பட்ட காலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மக்கள் மண் வீடுகளில் குடிபெயர்ந்தபோது காவி வண்ணங்களை சுவர்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் தனித்துத் தெரிவதற்காகவே அரிசி மாவில் மூங்கிளைக் கொண்டு தங்களில் வாழ்கை முறைகளை ஓவியமாகத் தீட்டியதே இந்த வார்லி ஓவியம்.
வார்லி ஓவியம் (Warli painting) என்பது ஒரு பழங்குடியன மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மகாராட்டிரம், குசராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான வார்லி மக்களால் வளர்க்கப்பட்ட கலையாகும்.
இந்த வார்லி ஓவியங்கள் எளிய அடிப்படை வடிவங்களை கொண்டே வரையப்படுகின்றன. அதாவது வட்டம், முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்களைக் கொண்டே தாங்கள் காணும் இயற்கை காட்சிகளை வரைகின்றனர். எடுத்துக் காட்டாக வட்ட வடிவத்தை சூரியன், சந்திரன் ஆகியவற்றை வரையவும், முக்கோணத்தை மலைகள், கூரான மரங்கள் போன்ற வடிவங்களை வரையவும், சதுர வடிவத்தை துண்டு நிலம் போன்றவற்றை குறிக்கும் வகையில் வரைகின்றனர். அவர்களின் அன்றாடப் பாடுகளின் பல நிலைகளை ஓவியமாக அம்மக்கள் தீட்டியிருக்கிறார்கள். அவர்களது திருமணத்தை ஒட்டி ஓவியங்கள் வரையும் பழக்கம் இருந்திருக்கிறது.
வார்லி ஓவியக் கலை இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவையாகச் சொல்லப்பட்டாலும் இந்த ஓவியக் கலை மிகச் சமீபத்தில்தான் பரவலான கவனத்துக்கு வந்தது. கி.பி. 10-ம் நூற்றாண்டில் இந்த ஓவியக் கலை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. வார்லி பழங்குடிகளின் வீட்டுச் சுவர்கள் மூலம் இந்தக் கலை புற உலகின் கவனத்துக்கு வந்தது.
வார்லி பழங்குடியினர் தங்கள் வீட்டுச் சுவர் கட்டுமானத்துக்கு மண்ணைக் குழைத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சுவரில் காவி வண்ணம் பூசுகிறார்கள். இந்தக் காவி பின்புலத்தில்தான் ஓவியங்கள் வரையப்படுகின்றன. காவிப் பின்புலத்தில் தெளிவாகத் தெரிவதற்காக வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
வெள்ளை நிறத்துக்கு அரிசி மாவைத் தண்ணீரில் குழைத்துப் பயன்படுத்துகிறார்கள். இதேபோல்தான் இங்கு தமிழ்ப் பண்பாட்டிலும் கோலமிடுவதற்கு அரிசி மாவைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்து வந்தது.
இன்று வர்த்தக ரீதியிலான அந்தஸ்து கிட்டியிருக்கும் இந்த ஓவியங்கள் தொடக்கக் காலத்தில் வார்லி பழங்குடியினர் தங்களுக்காக மட்டும் வரைந்தவை. இந்த ஓவியக் கலைக்கும் இந்தியாவின் பிற வட்டார ஓவியக் கலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இந்த வார்லி ஓவியக் கலையில் தெய்வ உருவங்கள் உருவாக்கப்படுவதில்லை; மேலும் இந்து மதச் சடங்குகளோ வழிபாடுகளோ இல்லை.
அவர்களின் அன்றாடப் பாடுகளின் பல நிலைகளை ஓவியமாக அம்மக்கள் தீட்டியிருக்கிறார்கள். அவர்களது திருமணத்தை ஒட்டி ஓவியங்கள் வரையும் பழக்கம் இருந்திருக்கிறது.
இந்த ஓவியக் கலை மற்ற பழங்குடி ஓவியக் கலையைப் போல பெண்களால் வரையப்படுபவையே. அதனால் பெண்களின் அன்றாடப் பாடுகள் அதிகமாக வரையப்பட்டுள்ளன. பெண்கள் அடுப்பூதுதல், குழந்தைகளைக் குளிப்பாட்டுதல் போன்ற ஓவியங்களைக் காண முடிகிறது.
வார்லி ஓவியக் கலை இன்றைக்கு சுவர் ஓவியமாக மட்டுமின்றி ஆடை வடிவமைப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலை, சுடிதார் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாமல் திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள் போன்றவையும் வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
வார்லி ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஆடைகளுக்கும், விரிப்புகளுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இது மட்டுமல்லாது ஓவியங்களாகவும் இவை இப்போது கிடைக்கின்றன. மேலும் வீட்டின் உள் அழங்கார வடிவமைப்பில் இந்த வார்லி ஓவியங்கள் முக்கியப் பங்கு வகுக்கின்றன. வார்லி பழங்குடியினரின் கொடையான இந்தக் கலை இன்று இந்தியா முழுவதும் வரையப்படும் கலையாக இருக்கிறது.
நீங்களும் ஒய்வு நேரத்தில் வார்லி ஓவியங்களை வரைந்து பழகலாம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இந்த வகை ஓவியங்களை அறிமுகப்படுத்தி வரைய ஊக்கப்படுத்தலாம்.
நீங்களும் ஒய்வு நேரத்தில் வார்லி ஓவியங்களை வரைந்து பழகலாம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இந்த வகை ஓவியங்களை அறிமுகப்படுத்தி வரைய ஊக்கப்படுத்தலாம்.
வரைவதற்கு எளிதாக இருக்கும். நேரமும் பயனுள்ளதாக அமையும்.
------- ஆலமரவிழுதுகள் .நெட் ------