மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 30 April 2020

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்


         மணி என்பவர் தன் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்றார். அங்கே அவர் ஒரு விற்பனை நிலையத்தில் வேலை கேட்ட போது, அவருக்கு சேல்ஸ் துறையில் முன் அனுபவம் இருக்கிறதா? என்று மேனேஜர் கேட்டார்.


        அதற்கு மணியும், நான் எனது நாட்டில் சேல்ஸ் மேனாகத்தான் வேலை பார்த்தேன் என்றார். உடனே, அவர் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.


     முதல் நாள் கடை மூடும் நேரமானதும் மேனேஜர் வந்து, இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்? என்று கேட்டார். அதற்கு மணி ஒருவரிடம் மட்டும் தான் என்று கூறினார்.


      உடனே மேனேஜர், என்ன ஒருத்தர் மட்டுமா?... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்வார்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார். பிறகு சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்? என்று கேட்டார்.


     மணியும், $100000க்கு விற்றேன் என்று கூறினார். ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்? என்று மேனேஜர் கேட்டார்.


      முதலில் அவரிடம் சிறிய தூண்டில், பிறகு கொஞ்சம் பெரிய தூண்டில், பிறகு அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன். பிறகு அவரிடம் எங்கே மீன் பிடிக்கிறீர்கள்? என்று கேட்டேன்.


       அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் எங்கு தங்கியிருக்கிறீர்கள் எனக் கேட்டேன்.

       இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்க கூடிய அளவுள்ள டெண்ட்-ம் விற்றுக் கொடுத்தேன்.

      என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்? என்று மேனேஜர் அதிசயமாக கேட்டார். அதற்கு மணி, ஐயோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார்.

        நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ்-ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன் என்றார். அதைக் கேட்ட அந்த வெளிநாட்டு மேனேஜர் மயங்கிவிழுந்து விட்டார்.



Pages