மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 26 May 2020

உடல் புத்துணர்வு பெற தினமும் இந்த ஆசனம் செய்யுங்கள் ..


   கண்களை மூடி, கைகளில் (சின்முத்திரை) கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொட்டபடி மற்ற விரல்கள் நீண்டிருக்கும் நிலையில் 10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். இது யோகா செய்வதற்கு முன் மனதை ஓய்வுபெறச் செய்யும்.

  அதிகாலையில் எழுந்து செய்யவேண்டும். சூரியன் உதிக்கும்போது (5.30 மணி முதல் 6.30 மணிக்குள்) செய்வது மிகவும் நல்லது. சூர்யோதய நேரத்தில் சூரியநமஸ்காரம் செய்தால் உடல் புத்துணர்வு பெறும். மாலையில் சூரியன் மறையும் நேரத்திலும் இதைச் செய்யலாம்.

     வயிறு காலியாக இருக்கவேண்டும். எந்த உணவும் இருக்கக் கூடாது.

    வலது காலை முன்புறம் வைத்து, பின்புறம் வைப்பது, பிறகு இடது காலை அதே போல் செய்வது - இதை ஒரு முறை என்று வைத்துக்கொண்டால், இதே போல் 6 முறை செய்யலாம்.

    காலையில் 6 முறை, மாலையில் 6 முறை செய்தால், வேறு எந்த மருந்து, மாத்திரைகளோ, உடற்பயிற்சியோ தேவையே இல்லை.

  அனைத்து ஆசனங்களின் பலன்களையும் ஒருங்கே தரக்கூடியது. மற்ற ஆசனங்களைச் செய்ய நேரம் இல்லை என்றாலும் கூட, இது ஒன்றைச் செய்தாலே போதுமானது.

  எந்த உபகரணமும் இன்றி, எடையைக் குறைக்க மிகவும் உதவும் பயிற்சி.

    மிகவும் வயது முதிர்ந்த பெரியவர்கள் செய்யக் கூடாது. மிகவும் களைப்பாக இருக்கும்போது செய்யாதீர்கள். காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் வலி இருந்தால் தவிர்க்க வேண்டும்.

     யோகா முடிந்ததும்.. தரை விரிப்பின் மேல் சப்பளங்கால் போட்டு, கைகளில் வணக்கம் வைத்து மூன்று முறை ‘ஆம்’ சப்தம் (ஆஆ… உஉ… ம்ம்…) சொல்லி, ‘சாந்தி… சாந்தி… சாந்தி’ என்று மூன்று முறை உச்சரித்து, பயிற்சியை முடிக்க வேண்டும்.

Pages