நாம் வாழும் இந்த பூமி அதிசயம், ஆச்சரியம், அழகுகள் என்று ஏராளமான இயற்கை காட்சிகள் நிறைந்தது.
ஆனால், அவை உருவான விதங்களைப் பார்த்தால் நமக்கு கொஞ்சம் பயம் மனதில் எட்டிப் பார்க்கும் .
ஒரு சில இயற்கை நிகழ்வுகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம் .
ஏரி என்றாலே ஓய்வெடுக்க அழகான இடம், ஆனந்தமாக எல்லோருடன் சேர்ந்து குளித்து மகிழ்வது, மீன் பிடிப்பது போன்றவைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் சில ஏரிகள் திகில் நிறைந்த ஏரிகளாகவும் உள்ளன.
அத்தகைய மர்மங்கள் நிறைந்த இறப்பு ஏரி எங்கிருக்கிறது தெரியுமா?
இத்தாலியில் சிசிலி தீவில்தான் இந்த மர்மான மனிதர்களை பயமுறுத்தும் இறப்பு ஏரி அமைந்துள்ளது.
மிகவும் ஆபத்தான ஏரிகளில் இதுவும் ஒன்று. இந்த ஏரியில் ஏதாவது உயிரினங்கள் தவிர்க்க முடியாத நிலையில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்... அழிந்துவிடும்.
இந்த ஏரியில் எந்த உயிரினங்களும் இல்லை. இறப்பு ஏரியின் கரைப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனை சுற்றி எந்த வொரு மரங்களோ, செடிகளோ வளருவதில்லை.
மனிதர்கள் இந்த ஏரி நீரில் நீந்தினால், சில நிமிடங்களில் அவர்கள் கரைந்து இறந்துவிடுவார்கள் என கூறப்படுகிறது.
இறப்பு ஏரியில் மனிதர்கள் இறப்பதற்கும், மரங்கள், செடிகள் வளராமல் இருப்பதற்கான காரணங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
விஞ்ஞானிகள் இந்த ஏரியை ஆய்வு செய்தபோது நீர்வாழ் சூழலில் அதிக அளவு செறிவூட்டப்பட்ட கந்தக அமிலம் வெளிவருவதால் இவ்வாறு நடக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இன்னும் என்னென்ன மர்மங்கள் இந்த பூமியில் உள்ளனவோ..