எப்போதுமே அரசு பள்ளிகள் என்றாலே தனிமதிப்பு உண்டு. ஒருசில காரணங்களால் மாறுபட்ட பார்வைகள் பலருக்கு இருந்தாலும் அரசுப்பள்ளி... அரசுப்பள்ளிதான் .....
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சரியான புரிதல் இருந்தாலே போதும். வெற்றிதான். தற்போது கொரோனா காலத்தில் பல அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சமூகப் பணிகள் பல செய்து வருகின்றனர்.
மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குதல் என பலர் செய்யும் சமூகப் பணிகள் வெளியில் தெரியாமலேயே செய்கின்றனர். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...
திருப்பத்தூர் மாவட்டம், பெரியவரிகம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சுமார் 240க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தம் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு உதவி செய்யலாம் என்று முடிவு செய்தனர்.
தலைமையாசிரியர் திருமதி.தி.நளினி மற்றும் உதவி ஆசிரியர்கள் திருமதி.க.யோகலட்சுமி, திரு.மூ.முத்தழகன், திருமதி.ரா.அனிதா, திரு.மா.பார்த்திபன், ஏ.எஸ்.ஜெகதீஸ்வரி, ப.சீனிவாசன், திருமதி.கோ.ஈஸ்வரி, திருமதி.M.பௌர்ணதேவி, திரு.ஜெ.குணசேகரன் ஆகியோரும் தன்னார்வல ஆசிரியர்கள் திருமதி.M.விஜயசாமுண்டீஸ்வரி, திருமதி.P.மலர்கொடி, திருமதி.M.ஜெயந்தி, திருமதி.M.A.பிரியதர்ஷினி ஆகியோரும் மாணவர்களுக்கு உதவ முடிவு செய்து அரிசி, எண்ணெய், மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை மாணவர்களின் குடும்பங்களுக்கு மே - 8 அன்று வழங்கினார்கள். உதவி செய்த அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மீண்டும் உதவி....
உதவ வேண்டும் என எண்ணம் இருந்தால் போதும்.... எண்ணம் ஈடேற சிறிது முயற்சி வேண்டும். பெரியவரிகம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்ய எண்ணிய , திரு.கோபி (மளிகைக்கடை ) அவர்கள் 150 கி அரிசி வழங்கினார். ஆசிரியர் ப.சீனிவாசன் அவர்கள் கோதுமை (1கி) பாக்கெட் -150 மற்றும் சேமியா பாக்கெட்- 150 ம் வழங்கினார். ஆசிரியர் S.ராஜேஷ் அவர்களின் உதவியோடு மறுபடியும் மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மே -17 அன்று சிறப்பாக வழங்கப்பட்டது.
மாணவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. உதவி செய்தால் விளம்பரம் இல்லாமல் உதவி செய்ய வேண்டும் என பலர் கூறுவதை கேட்கலாம்.
இப்போதைய காலகட்டத்தில் பலர் எண்ணங்களில் அதிக தீமையும், குறைந்த நன்மையுமே காணப்படுகிறது. காரணம் அதிக தீமை செயல்களையே தினமும் காண வேண்டியுள்ளது.
அவ்வப்போது இதுபோல மனங்களில் மாறுதல்களை உண்டாக்கும் நல்ல விஷயங்களையும் காண வேண்டும். நாமும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணங்கள் எழ வேண்டும்..
இன்றைய தலைமுறை மாணவர்களின் மனங்களில் நல்ல எண்ணங்களை விதைப்போம். இதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அவசியம்.
நல்ல எண்ணங்களை போற்றுவோம். மாணவர்களுக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் .... நன்றி.
---- ஆலமரவிழுதுகள்.நெட்