மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 2 May 2020

உலக சிரிப்பு தினம் - மே முதல் ஞாயிறு


         ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை.

    எனவே, ஆண்டுதோறும் உலக சிரிப்பு தினம் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முடிந்தளவு மக்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடி சிரித்து மகிழ்கின்றனர்.

      இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Movement) தொடங்கியவர்.

      மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது. முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர். இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000-ம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. 

       இன்றைய இயந்திர உலகத்தில் ஒவ்வொருவரையும் மன அழுத்தம், சோர்வு அடைவது மட்டுமன்றி நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். உடலும் மனமும் புத்துணர்ச்சியை ஒரே நேரத்தில் பெரும் அரிய மருந்தாக லாபர் யோகா முறை உள்ளது என கூறுகின்றனர் 

      வழக்கமாக ஒரு மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி பலனை லாபர் யோகாவை செய்த 20 நிமிடங்களில் பெறலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். நாள்தோறும் 30 நிமிடங்கள் வாய்விட்டுச் சிரிப்பது மாரடைப்பு காரணமாக மன அழுத்தம் ஹார்மோன்களின் சுரப்பும் அவற்றின் மூலக்கூறு எண்ணிக்கையும் குறையும் எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    சிரிப்பு என்பது மனிதனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது மனிதனின் ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகின்றது. திரைப்படத்திலும் மக்களை மகிழ்விக்க வடிவேலு போன்ற தலை சிறந்த நகைச்சுவை கலைஞர்கள் நம்மை சிரிக்க வைக்க பாடுபடுகின்றனர். அது அவர்களின் நலனுக்காக அல்ல நமது உடல் நலனுக்காகவும் மன நலனுக்காகவும் தான். சிரிக்க சிரிக்க உடலும் மனதும் புத்துணர்வு பெறுகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. 

    எனவே சிரிக்க பழகுவோம் சிரித்துக் கொண்டே இருப்போம். ஒவ்வொரு தினமுமே சிரிப்பு தினமாகக் கொண்டாடுவோம்.

Pages