கர்மவீரர் என அன்போடு அழைக்கப்படும் காமராசர் என்ற மாபெரும் தலைவர் வாழ்வில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கர்மவீரர் காமராசர் மீது தீராத பாசம் கொண்டிருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கர்மவீரரை சந்தித்து மகிழ்ந்தார்.
தனது இல்லத்தில் எத்தனையோ தலைவர்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது. காமராசரை வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு அருகே அமர்ந்து விருந்து சாப்பிட வேண்டும் என்பதே அவரின் ஏக்கம்.
ஆனால் எப்போது அழைத்தாலும் "சொல்றேன்" என்ற ஒற்றை வார்த்தை சொல்லி தவிர்த்து விடுவார். கடைசியாக ஒருமுறை அழைத்துவிடுவது என முடிவு செய்தார்.
ஒரு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் காமராசரை, வழியனுப்பும் போது எம்.ஜி.ஆர் அவர்கள் வீட்டிற்கு விருந்து உண்ண மறுபடியும் அழைத்தார்.
அப்போது காமராசர் புன்னகை மாறாமல், " ராமச்சந்திரா.. உன் வீட்டிற்கு வரக்கூடாது என்றில்லை.. உன் வீட்டு விருந்து பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அறுசுவை உணவும், மீன் , அசைவ உணவுகள் நிறைய இருக்கும் என கூறுவார்கள்.."
"நான் மக்கள் ஊழியக்காரன்.. ரெண்டு இட்லி, தயிர்சாதம்தான் எனக்கு சரிப்பட்டு வரும். உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டால் மறுபடியும் நாக்கு ருசி தேடும்.. அதுக்கு நான் எங்கே போறது.." என காமராசர் கூற, எம்.ஜி.ஆர் ஆடிப்போனார்.
தன்னையும் அறியாமல் காமராசரை வணங்கினார். அதுமுதல் காமராசரை விருந்துக்கு எம்.ஜி.ஆர் அழைப்பதில்லை..
இப்படியும் ஒரு முதல்வர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார். தன் வீடு பார்க்காமல்.. தன் வாழ்வைப் பற்றி கவலைப்படாமல் நாடு முன்னேறவும், நாட்டு மக்களுக்காகவும் நாளும் உழைத்த, தலைசிறந்த மக்கள் தலைவர் காமராசரை போற்றி வணங்குவோம்..
கிங் மேக்கர் காமராசர்..