மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 21 May 2020

தகுதியானவர்களுடன் நட்பு கொள்ளுங்கள்......


          அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் மரப்பொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும், சுண்டெலியும் சந்திப்பது வழக்கம்.

         ஒரு நாள் சுண்டெலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே சுண்டெலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத்தர முடியுமா? என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் கற்றுத்தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது.

      அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடைய காலை சுண்டெலியின் காலுடன் சேர்த்து ஒரு கயிற்றினால் கட்டிக்கொண்டது. 

         அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சுத்திணறி இறந்து போனது.

         சுண்டெலியின் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. அந்த சமயம் தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததை கண்ட கழுகு, கீழ் நோக்கி வந்து அந்த சுண்டெலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது.

        அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் கழுகின் பிடியில் சிக்கியது. இரண்டு விருந்து கிடைத்த சந்தோஷத்தில் கழுகு தவளையையும் கொன்று தின்றது.

நீதி :
        நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா? என்று யோசிக்க வேண்டும். இல்லையேல் தவளைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும்.

Pages