மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 27 May 2020

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பொன்மொழிகள்


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு  அவர்களின் நினைவுநாளான இன்று ( மே-27 ) நம் நெஞ்சில் நிற்கும் அவருடைய பொன்மொழிகளைப் பார்ப்போம்... வாருங்கள்..





* முயற்சியுடன் செயல்படுபவர்களையே வெற்றி தழுவும் 

*  செயலுக்கு முன்பே விளைவுகளைப் பற்றி அஞ்சுபவர்களுக்கு வெற்றி வெகுதூரம்.

* மிரட்டி பணிய வைக்கும் எந்த செயலும் வெறுக்கத்தக்கதே.

* ஆண்டவனிடம் நம்பிக்கை இல்லாவிட்டால் நம் சொந்த வாழ்விலும், நம் சமுதாய வாழ்விலும் முன்னேற முடியாது.

* தோல்வி என்பது அடுத்த காரியத்தைக் கவனமுடன் செய்ய வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை.

*  கடப்பதற்கு தடைகளும், தீர்ப்பதற்கு பிரச்சினைகளும் இல்லாவிட்டால் வாழ்க்கை உப்பில்லா பண்டம் போன்றதே.

* உண்மையான நம்பிக்கை ஒருவருக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலையையே அசைத்து விடும்.

* முடிந்ததைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தால், இருப்பது காணாமல் போய்விடும்.

* கோழைத்தனம் அனைத்தையும் பாழாக்கும். வீரமே அனைத்தையும் வெல்லும்.

* கோழைகள்தான் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். வீரர்கள் எப்போதும் சமாதானத்தையே விரும்புகின்றனர்.

* வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

* சொல்லும், செயலும் பொருந்தி வாழ்கிற மனிதனே உலகில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.

* விளைவுகளை வைத்துதான் செயலின் சிறப்பை மதிப்பிட முடியும்.

* உங்கள் உடல்நலனை எப்படி பாதுகாக்கிறீர்களோ, அதுபோல நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும்.

* உண்மையை சில நேரங்களில் அடக்கி வைக்க முடியும். ஆனால் ஒடுக்கி வைக்க முடியாது.

* ஒன்றை அடைவதற்கு தேவையானவை. நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல்.

* அச்சம் போன்ற மிக மோசமான ஆபத்து வேறு ஒன்றும் இல்லை.

* துணிந்து செயல்படுபவர்கள் அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகின்றனர்.

* அறியாமை எப்போதும் மாற்றத்தைக் கண்டு அஞ்சுகிறது.

* அழகும், சாகசமும் நிறைந்த அற்புதமான உலகில் நாம் வாழ்கிறோம். கண்களைத் திறந்து பார்த்தால் மட்டுமே அவற்றை ரசிக்க முடியும். 

-- ஆலமரவிழுதுகள்.நெட்

Pages