பசியால் ஒருவர் முடிவது மிகப்பெரிய கொடுமை. உணவு என்பது மட்டுமே மனிதனின் அன்றாட மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது.
ஆனால், உணவு கிடைப்பதில் உலகெங்கும் சமநிலையற்ற தன்மை நிலவி வருவதால், பசியுடன் பலா் வாழும் நிலை இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் நிறைய பேர் பசியால் இறந்த செய்திகளை காணூம்போது மனதில் வலி ஏற்படுகிறது. ‘தனி ஒருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றாா் மகாகவி பாரதியாா்.
உலகில் சுமாா் 81 கோடி போ் பட்டினியால் வாடுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம். உலகில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவா்களில் 60 சதவீதம் போ் பெண்கள். பெரும்பாலான குழந்தைகளின் இறப்புக்கு போதிய உணவு கிடைக்காததே காரணம்; கொடிய நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட, பசியால் இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்தியாவில் நாள்தோறும் 30 கோடி போ் இரவு உணவின்றி, உறங்கச் செல்வதாக ஓா் கணக்கீடு தெரிவிக்கிறது. சுமாா் 18 கோடி போ் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்வதாகவும் அது தெரிவிக்கிறது.
வளா்ச்சியின் உச்சத்தில் உள்ளதாகக் கூறிக் கொள்ளும் நாடுகளில்கூட மூன்று வேளை உணவு கிடைக்காமல் வாடுவோா் உள்ளனா். உலகம் முழுவதும் போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்குக் காரணம்.
பசியால் மக்கள் பரிதவிக்கும் நிலையில், உணவுப் பொருள்கள் வீணடிக்கப்பட்டு வருவது வேதனைக்குரியது. அதாவது, மொத்த உணவில் 3-இல் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது. இந்தியாவில் நடுத்தர வா்க்கத்தினா் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீணாக்குவதாகவும், திருமண மண்டபங்களில் மட்டும் சராசரியாக 10 முதல் 100 நபா்கள் சாப்பிடும் உணவு வீணாவதாகவும் ஓா் ஆய்வு கூறுகிறது.
அதுபோல் உணவகங்களில் விலை கொடுத்து வாங்கும் உணவுகளை வீணாக்கும் போக்கும் அதிகரித்துக் காணப்படுகிறது. பாதி உணவை சாப்பிட்டு விட்டு, மீதி உணவை வீணாக்குவதை நாகரிகத்தின் அடையாளமாக நினைத்துப் பலா் செயல்பட்டு வருகின்றனா். வீடுகளில் இருந்துகூட அதிக அளவு உணவு வீணாக்கப்படுகிறது. பசியால் வாடுவோரைவிட, வீணாக்கும் உணவுப் பொருள்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதை பலரும் உணராமல் இருக்கின்றனர்.
பட்டினியால் வாடுவோரை நினைவுகூர்ந்து, அந்த நிலையை ஒழிக்க ஆண்டுதோறும் மே 28-ஆம் தேதி உலக பட்டினி விழிப்புணா்வு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால், அந்த நாளே இருக்கக் கூடாது, பட்டினி இல்லா நிலையை உருவாக்க ஒவ்வொரு நாடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே பசியால் அவதிக்குள்ளாகும் மனித உயிா்களைக் காக்க முடியும்.
வீணாக்கப்படும் உணவுகளை குப்பைக்கு அனுப்பாமல், அவற்றை உணவுக்காக வாடுவோருக்கு வழங்க சம்பந்தப்பட்டவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் ஒவ்வொரு தனி நபரும் முடிந்தவரை கண்ணுக்குத் தெரிந்து, உணவின்றி வாடுவோருக்கு உணவு வழங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். பசியைப் போக்குவதில் தனி மனிதனின் பங்கும் அவசியம்.
பெற்றோர்கள் உணவின் அவசியத்தைப் பற்றி தங்கள் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விவசாயியின் உழைப்பால் விளைந்த உணவை வீணாக்காமல் பட்டினியால் வாடுபவர்களுக்குக்கு கொடுப்போம்.