கோடை காலம் வந்துவிட்டால், மாம்பழம் பற்றிய சிந்தனையும் நம் மனதில் அதிகமாகிவிடும். இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் விரும்பும் பழமாக மாம்பழம் இருக்கிறது.
பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் சுவை, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரும்பாலானோருக்கு விருப்பப் பழம் என்று கூறலாம். அலெக்சாண்டர் முதல் ஜஹாங்கிர் வரை, அனைத்து அரசர்களும், தங்களது வணிகத்தை மாம்பழம் மூலம் அதிகரித்துக்கொண்டனர். மாம்பழத்தை தவிர, வேறு எந்த பழமும் இவ்வளவு பிரபலமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற மாம்பழத்தை பற்றி, மாம்பழப்பிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 சுவாரசியமான தகவல்கள்...
1. இந்தியாவின் மிக பழமையான பழங்களுள் ஒன்றாக மாம்பழம் கருதப்படுகிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர், வடகிழக்கு பகுதியான மியான்மரில் உள்ள மலைப்பகுதிகளில் முதன் முதலில் மாம்பழம் கண்டுபிடிக்கப்பட்டது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
2. புத்த மதத்தினர், மாம்பழத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மேலும், மாமரத்தை மிகவும் புனிதமாக கருதுவார்கள். சிறந்த பரிசுப்பொருளாக மட்டுமல்லாமல், புத்த துறவிகளின் நீண்ட பயணத்தின்பொழுது, சில மாம்பழங்களையும் அவர்களுடன் எடுத்துச்செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
3. பல வருடங்களுக்கு முன்னர், தமிழில் ‘ஆம்-காய்’ என்று அழைக்கப்பட்டாலும், பின்னர் ‘மாம்-காய்’ என்று அழைக்கப்பட்டு, அதன் பின்னர் ‘மாங்காய்’ என மருவியது. போர்ச்சுகீசியர்கள், மாங்காய்க்கு, mango என்ற பெயரை வைத்து, அதனை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினர்.
4. பழங்கால இந்தியாவில், மாமரம் செழுமையின் சின்னமாக மதிக்கப்பட்டது. ஹ்சூய்ன் ட்சாங் (Hsiun-Tsang) என்ற பழங்கால எழுத்தாளர், இந்தியா முழுவதும் பயணம் செய்து, இந்திய அரசர்கள் சாலையோரங்களில் எத்தனை மாமரங்களை செழுமையின் சின்னமாக நட்டுவைத்திருந்தனர் என்ற எண்ணிக்கையை குறிப்பிட்டிருந்தார் என்று தகவல்கள் கூறுகின்றன.
5. பழமையான இந்து புராணங்களில் மாம்பழம், சூரியக்கடவுளின் மகளாக நம்பப்படுகிறது.
6. மாம்பழத்தின் அதீத சுவையை விரும்பிய மாவீரர் அலெக்சாண்டர், கிரீஸ் நாட்டிற்கு திரும்பி சென்ற பொழுது, அதிகமான மாம்பழங்களை எடுத்துச்சென்றார் என்றும் கூறப்படுகிறது.
7. இந்தியாவைத் தவிர, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தேசிய பழமாக மாம்பழம் இருக்கிறது.