மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 15 June 2020

நல்ல மனிதராக வாழ இதை செய்யுங்கள்..

Two parrots..!
          Two parrots built a nest in a banyan tree. They lived with their two young ones, which they took good care of. The mother and the father parrot went out to gather food in the morning and came back home by evening. One day, when their parents were away, the young parrots were taken by a cruel hunter.


      One of the birds managed to escape and flew away from the hunter. It reached a hermitage and grew up listening to kind words and compassion. The hunter put the other parrot in a cage, and soon it learned a few words. The hunter and his family were crude and didn′t care much about kind words.

      One day, a passerby was resting outside the hunter′s hut. Sensing someone outside, the parrot said, Fool, why are you here? Fool! Leave! I′ll cut your throat. The traveler scared and went away, he reached the hermitage where the other parrot was. The parrot at the hermitage spoke, Welcome traveler. You are free to stay here as long as you want.

     The traveler surprised and told the parrot that he encountered a similar parrot elsewhere and it was very cruel. How is that you are so kind? The parrot replied, That must be my brother. I live with the sages, and my brother lives with hunters. I learned the sage′s language, and my brother learned the hunter′s language. The company we keep decides who we will be.

Moral of the story : Keep good company if you want to be a good person.

      இரண்டு கிளிகள் ஒரு ஆலமரத்தில் கூடு கட்டி தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தது. அந்த இரண்டு கிளிகளும் உணவை சேகரிக்க காலை வேளையில் சென்று மாலை நேரத்தில் திரும்பி விடும். ஒரு நாள், அவை இரண்டும் தொலைதூரத்திற்கு சென்று விட்டன. அந்த இரண்டு இளம் கிளிகளை ஒரு கொடூரமான வேட்டைக்காரன் வேட்டையாடி சென்றான். 

     இரண்டு இளம் கிளிகளுள் ஒரு கிளி மட்டும் வேட்டைக்காரனிடம் தப்பித்து துறவி வாழும் இடத்தை அடைந்துவிட்டது. 

    அங்கிருந்தவர்களின் அன்பான வார்த்தைகளையும் மனிதாபிமான -த்தையும் பார்த்து வாழ்ந்து வந்தது. அந்த வேட்டைக்காரன் இன்னொரு கிளியை கூண்டிற்குள் அடைத்து வீட்டிற்கு எடுத்து சென்று விட்டான். வேட்டைக்கார குடும்பம் மிகவும் பண்பாடற்ற குடும்பம். அவர்களிடமிருந்து கிளியும் ஒரு சில வார்த்தைகளை கற்றுக் கொண்டது. 

    ஒரு நாள், வேட்டைக்காரனின் குடிசைக்கு வெளியில் ஒரு பயணி தங்கியிருந்தார். வெளியே யாரோ இருப்பதை உணர்ந்த கிளி, முட்டாள், நீ இங்கு ஏன் இருக்கிறாய்? இப்பொழுதே இந்த இடத்தை விட்டுச்செல், இல்லையெனில் நான் உன்னுடைய தொண்டையை கடித்துவிடுவேன் என்றது. பயணி பயந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு துறவி வாழும் இடத்திற்கு சென்றான். அந்த இடத்தில்தான் தப்பிச் சென்ற கிளியும் உள்ளது. பயணியை கண்ட கிளி, வாருங்கள். நீங்கள் விரும்பும் வரை இந்த இடத்தில் தங்கி சுதந்திரமாய் இருங்கள் என்று வரவேற்றது. 

     பயணி மிகவும் அதிர்ச்சியடைந்து அந்தக் கிளியிடம் உன்னைப் போலவே வேறொரு இடத்தில் ஒரு கிளியைக் கண்டேன். அந்த கிளி பேசும் வார்த்தைகளை கண்டு நான் பயந்து இங்கே வந்து விட்டேன். அது சரி எப்படி நீ இவ்வளவு அன்பாக இருக்கிறாய் என்று பயணி கிளியிடம் கேட்க, அது என் சகோதரனாகத்தான் இருக்க வேண்டும். நான் முனிவர்களுடன் வாழ்கிறேன், என் சகோதரனோ வேட்டைக்காரர்களுடன் வாழ்கிறான். நான் முனிவரின் அன்பான மொழியைக் கற்றுக்கொண்டேன், என் சகோதரன் வேடரின் பண்பாடற்ற மொழியை கற்றுக்கொள்கிறான். நம்முடைய பழக்கவழக்கம் நம்முடன் இருப்பவர்களை வைத்து தான் மாறும் என்றது கிளி.

கதையின் கருத்து : நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருக்க விரும்பினால், நல்ல துணையை நண்பராக வைத்துக் கொள்ளுங்கள்.

Pages