மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 17 July 2020

எப்படி இருந்தால் வெற்றி கிடைக்கும்.


      ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நான் ரொம்பப் பெரிய ஆள். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் போதும்! என்று நினைத்தது.

      தேடிக் கொண்டே இருந்தது. ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறியதாகி அதன் காலடியில் விழுந்திருந்தது. பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்... என்று வருந்தியது நரி. இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. 

    மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது. அதனால், நரிக்குத் தன் நிழலே தெரியவில்லை. நாம் வெகுவாக இளைத்து விட்டோம் போலிருக்கிறது. அல்லது இறந்து போய் விட்டோமோ? என்று பயந்தது. பிறகு, இல்லை.. இல்லை.. நான் உயிரோடு தான் இருக்கிறேன். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும் என்று தள்ளாடி, தள்ளாடி நடந்தது. 

 கதையின் கருத்து : காலை நரி போல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம். மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம். சாதனைகள் பல செய்யலாம்.

         A fox got up early in the morning and headed west to hunt. In the sunlight rising from the east, its shadow was very large. Fox thought that I am a very big man. If I am so big I would get at least one elephant or a camel!

        The search was on. But, nothing came of it. When the sun came up at noon, the fox′s shadow became smaller and fell at its feet. The fox regretted that I was so marasmus of hunger .... A young goat or a hen was found to be sufficient for this marasmus. 

      The fox′s shadow fell behind the fox by the sun in the west in the evening. So the fox didn′t know his shadow. Fox was terrifying and said that, if I was too marasmus. Or are I dead? . Then, no, no .. I′m alive. If it is chicken or even ant was enough for this hunger.

Moral of the story : Don′t look proudly like a morning fox. Don′t worry like a fox in the evening. Let us be natural.

Pages