The managing director of a software company accused of corruption charges Rs. 4000 crores, and that person appeared in court before the judge. The judge asked did they give you something to eat at the morning, in jail? The director said no. The judge ordered the court staff to buy four Idli. Idli parcel was given to the Director′s hand. The director couldn′t eat more than three idly.
"Why didnot eat one Idli?" The judge asked. The director said I could not eat. You eat only three idli. There is no place in your stomach for more than that. For this you have been corrupted four billion crores? The essential needs of man are very less. Luxury needs are high. Four thousand crore is not enough for your luxury needs, the judge said. The director started crying.
Cheer the person around us. We′re not going to live 200 years. We don′t own the next second. keep your needs and give some needs to help who are not in needs. You are the lord.
Moral of the story : For your selfishness, don′t hurt others.
ஒரு மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரூ. 4000 கோடி ஊழல் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜரானார். அவர்கள் சிறைச் சாலையில் உங்களுக்குக் காலையில் சாப்பிட ஏதாவது கொடுத்தார்களா? என்று நீதிபதி கேட்டார். 'இல்லை" என்றார் இயக்குனர். நான்கு இட்லியை வாங்க நீதிமன்ற ஊழியர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இயக்குனரின் கையில் இட்லி பொட்டலம் கொடுக்கப்பட்டது. இயக்குனருக்கு மூன்று இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை.
'ஒரு இட்லியை ஏன் சாப்பிடவில்லை? " என்று நீதிபதி கேட்டார். என்னால் சாப்பிட முடியவில்லை என்று இயக்குனர் கூறினார். நீங்கள் மூன்று இட்லி மட்டுமே சாப்பிடுகிறீர்கள். அதை விட உங்கள் வயிற்றில் இடமில்லை. இதற்காகத்தான் நீங்கள் 4000 கோடி ஊழல் செய்துள்ளீர்களா?. மனிதனின் அத்தியாவசிய தேவைகள் மிகக் குறைவு. ஆடம்பர தேவைகள் அதிகம். உங்கள் ஆடம்பர தேவைகளுக்கு நான்காயிரம் கோடி போதாது என்று நீதிபதி கூறினார். இயக்குனர் அழ ஆரம்பித்தார்.
நம்மைச் சுற்றியுள்ள நபரை உற்சாகப்படுத்துங்கள். நாம் 200 ஆண்டுகள் வாழப்போவதில்லை. அடுத்த வினாடி நமக்கு சொந்தமில்லை. உங்கள் தேவைக்கு வைத்துக்கொண்டு மீதியை இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். நீங்களே இறைவனாவீர்கள்.
கதையின் கருத்து :
நம் சுயநலத்திற்காக மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.