இந்தியாவின் ரூபாய் நோட்டுகள் நாசிக் என்ற இடத்தில் அச்சடிக்கப்படுகின்றன. ஆனால் நாணயங்கள் எங்கே அச்சடிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..
இந்தியாவின் நாணயங்கள் 4 இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. அவை டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. சரி.. எந்த நாணயம் எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது? அதற்கும் அடையாளங்கள் உள்ளது.
நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு இருக்கும் பார்த்திருக்கிறீர்களா? அதன் அடியில் ஒரு குறியீடு இருக்கும். அதை வைத்து தயாரிக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
ஒரு புள்ளி இருந்தால் டெல்லி,
டைமண்ட வடிவம் இருந்தால் மும்பை,
நட்சத்திரம் இருந்தால் ஹைதராபாத்,
எந்த குறியீடும் இல்லை எனில் கொல்கத்தா.
இப்போது நாணயத்தை எடுத்து அது எந்த இடத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை கண்டுபிடியுங்கள்...