மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 26 November 2020

புயலுக்கு பெயர் வைப்பது யார்?

     ந்தியப் பெருங்கடலுடன் இணைந்துள்ள அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் உருவாகும் புயல்களுக்கு,

இந்தியா ,

பாகிஸ்தான், 

வங்கதேசம் ,

இலங்கை ,

மாலத்தீவு ,

மியான்மர் ,

ஓமன், 

தாய்லாந்து  ஆகியவை 2004 ல் ஒரு நாட்டுக்கு தலா எட்டு பெயர் என 64 பெயர்களை தேர்வு செய்தன. 

இந்தப் பெயர்கள் 2020 மே 16 - 21 ல்  முடிந்துவிட்டது. 

64 வது புயலின் பெயர்தான் ஆம்பன்  புயல் , தாய்லாந்து. 


புதிய பட்டியல் 2020 மே 1 ல் வெளியிடப்பட்டது .

ஏற்கெனவே இருந்த 8 நாடுகளுடன் தற்போது ,

ஈரான் 

கத்தார் 

ஏமன் 

சவுதி 

U.A.E  முதலிய 5 நாடுகள் சேர்க்கப்பட்டன. இப்போது மொத்தம் 13 நாடுகள்.

ஒவ்வொரு நாடுகளும் தலா 13 பெயர்கள் என மொத்தம் 139 பெயர்கள் உள்ளன.

இதில் மூன்றாவது பெயர்தான்  நிவர்.


Pages