மனிதர்கள் விரும்பும் உணவுகளில் முதல் இடம் அரிசி. அது அவர்களின் சிறந்த தேர்வு. ஆனால் அரிசி வளர்வதற்கு நிறைய உழைப்பும், நிறைய நீரும் தேவை. குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் உழைப்பு மிக அதிகமாக தேவைப்படுகிறது.
குவாங்சி மற்றும் யுன்னன் மாகாணங்கள் சீனாவில் உள்ளது. தெற்கு சீனாவின் மலைப்பாங்கான பகுதிகளான ஷாங்காய் முதல் திபெத் வரையுள்ள மலைப்பாங்கான அடுக்கு நிலங்களில் விளையும் அரிசி சுவையானது. இது உலகின் இரண்டாவது சுவையான மற்றும் அதிக விளைச்சலை காணும் நிலமாக விளங்குகிறது.
வடகிழக்கு குவாங்சி மாகாணத்தில் பிங் மற்றும் ஜிங்கெர்க் கிராமங்களுக்கு அருகில் உள்ளகண்கவர் லாங்ஜி அடுக்கு நிலங்கள் இவை. இப்பகுதிக்குப் போக்குவரத்து பஸ், லாங்ஷெங்கின் நகரத்திலிருந்து இரண்டு மணி நேர பயணம். மேலும் இது ஷென்ஜெனிலிருந்து பனிரெண்டு மணிநேரம் ஆகும். ஆனால் பயணம் மதிப்பிற்குரியது.
பழைய சீனா இங்கே உள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்பு யுவான் வம்சத்தின் போது அடுக்கு நிலங்கள் வெட்டப்பட்டது. அக்கால விவசாயிகள் செய்ததைப்போலவே இக்கால விவசாயிகளும் தங்கள் வயல்களில் கடுமையாக உழைக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை உலகின் மிகச்சிறந்த அரிசியை இம்மண்ணும், இம்மனிதர்களும் தக்க வைத்துள்ளனர்.