வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!
வாழை தண்டு, வாழை பழம், வாழை காய் முதலியவை உணவாக பயன்படுகிறது. வாழைத்தண்டில் மேல் பட்டை தீக்காயங்களுக்கும் மேலும் சில மருத்துவம் சார்ந்த மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.
மனிதனின் வாழ்வில் பிரிக்க முடியாத முக்கிய அங்கங்களில் ஒன்று வாழை. வாழை இலை விருந்தோம்பல் தமிழரின் வாழ்வியல் கலாச்சாரத்தில் கலந்த ஒன்று.
என்னதான் காலங்கள் மாறினாலும், கலாச்சார மாற்றமடைந்தாலும் தமிழர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத சிறப்பு வாழைக்கும், வாழை இலை விருந்தோம்பலுக்கும் மட்டுமே உண்டு.
மனிதனின் வாழ்வியலில் ஒன்றாய் கலந்த வாழையின் அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியவை. இதில் வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்....
வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..
தொடர்ந்து வாழை இலையில் சாப்பிடுவதால், தோல் சார்ந்த நோய்கள் மறைந்து, பளபளப்பான தோல் கிடைக்கும். இது நமது முடியை பலகாலம் கருப்பாக வைத்து இளநரையை மறைக்கும் ஆற்றல் கொண்டது.
நாம் உபயோகித்த பின்னும் வாழை இலை ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. இல்லையென்றால் மக்கி, இயற்கை உரமாக மாறிவிடுகிறது. இது சூற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்று.
வாழை இலையில் உண்பதால் நமக்கு ஏற்படும் வயிற்று புண் ஆறும். வாழை இலையில் உள்ள குளோரோபில் எனும் வேதிபொருள், பல நச்சு கிருமிகளை அழிக்கக் கூடியது. இதனால் நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகிறது.