அசுரர்களின் கிரிஸ்டல் கேவ்..!
குகைகளில் உள்ள சில காட்சிகள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும். ஒரு சில குகைகளில் உள்ளே சென்றால் வெளியே வர முடியாது. பொதுவாக நாம் குகைகளை மலைப்பகுதியில் காணலாம். அவற்றில் எண்ணற்ற அதிசயங்கள், மர்மங்கள் மறைந்திருக்கின்றன.
ஆனால் இந்தக் குகைகள் எல்லா குகைகளை விட சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. இந்த அதிசயமான குகையைப் பற்றிப் பார்க்கலாம்.
இந்த ராட்சத படிக குகை (Giant Crystal Cave) மெக்ஸிக்கோ பகுதியில் சுரங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரு குகை ஆகும். இவை இயற்கையாகவே உருவான கிறிஸ்டல் குகை (Crystal Cave) ஆகும்.
படிகங்கள் வளரத் தேவையான தாதுக்கள் இந்தக் குகையில் நிரம்பிக் காணப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் அதிசயம் என்னவென்றால் தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் இந்தக் குகை நம் கண்களுக்கு காட்சியளிக்குமாம்.
நீலநிற ஏரிக் குகை..!
குகைகள் பொதுவாக நாம் செல்வதற்கு அச்சுறுத்தும் விதத்தில்தான் இருக்கும். ஆனால் அவற்றில் சில அதிசயமான நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் சில குகைகள் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் விதத்தில் அமைந்து இருக்கும். அவற்றை நேரில் சென்று பார்த்தால் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
ஸ்ரீஅந்த வகையில் நாம் இன்று ஒரு அதிசயமான, பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை அளிக்கும் குகையைப் பற்றி பார்க்கலாம்.
இந்த அற்புதமான குகை பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது. தேசிய வரலாற்று மற்றும் கலை பாரம்பரிய நிறுவனத்தால் இயற்கையின் நினைவுச் சின்னமாக இந்தக் குகையைக் பட்டியலிட்டனர்.
நம்முடைய கண்களால் இந்த ஏரி குகையைப் பார்க்கும்போது பிரம்மிப்பில் ஆழ்த்தும். இயற்கையின் அழகையே மிஞ்சும் அளவில் அமைந்துள்ள இடமாக இது திகழ்கிறது.
இதன் அதிசயம் என்னவென்று சொன்னால் மற்ற ஏரிக் குகையில் இருக்கும் நீர் வெள்ளை நிறத்தில்தான் காட்சியளிக்கும். ஆனால் இந்த குகைகளில் உள்ள ஏரியின் நீர் நிலநிறத்தில் காட்சி அளிக்கும். அதற்கு காரணம் ஏரி சூரிய ஒளியால் ஒளிரச் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட மாதங்களில் மட்டும்தான் இதில் உள்ள நீர் நீலநிறத்தை அடைகின்றன.
நீல ஏரிக்குகை உடையக்கூடிய சுண்ணாம்பு வடிவங்களைக் கொண்டவையாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இந்தக் குகையை பார்வையிடுவதற்கு வருகின்றனர்.