மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 16 July 2021

மாணவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் சலுகை

 


         இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட சில ஆப்பிள் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.


           மேக்புக், ஐமேக் மற்றும் ஐபேட் இவற்றின் குறிப்பிட்ட சில மாடல்களை வாங்குவோர்க்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்கப்படுகிறது. அவை,

மேக்புக் ஏர், மேக்புக் புரோ, ஐமேக், மேக் ப்ரோ, மேக் மினி, ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் போன்ற மாடல்கள்.


          இதுதவிர, ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ரூ. 4000 க்கும், ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ரூ.10000 க்கும் வழங்குகிறது. மேலும், ஆப்பிள்கேர் சேவையில் 20% தள்ளுபடியும், ஆப்பிள் பென்சில், கீபோர்ட் சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் தருகிறது.


              ஆப்பிள் மியூசிக் ஸ்டூடன்ட் திட்டம் ரூபாய் 49 விலையில் கிடைக்கிறது. மேலும், ஆப்பிள் ஆர்கேட் சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாகவும், அதன்பின் மாதம் 99 ரூபாய் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.


மேலும் அறிய கீழேயுள்ள லிங்கை கிளிக்  செய்யவும்...

www.apple.com


Pages