இன்றைய வரலாறு... சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டே
இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார்.
இவர் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்கிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது.
பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
மங்கள் பாண்டேவின் வரலாற்றை சித்தரிக்கும் The Rising என்ற திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
முக்கிய நிகழ்வுகள்
1980ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் மாஸ்கோவில் ஆரம்பமானது.
1846ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அமெரிக்க வானியலாளரும், இயற்பியலாளருமான எட்வார்டு சார்லசு பிக்கரிங் பிறந்தார்.
இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன் 1759ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி மறைந்தார்.