மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 20 July 2021

இன்று சர்வதேச சதுரங்க தினம்.. செஸ் விளையாட்டின் நன்மைகள்..




         7-ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த ‘சதுரங்கம்’ என்னும் விளையாட்டின் வளர்ச்சியே, தற்போதைய ‘சதுரங்க விளையாட்டு’.  இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கும் பரவிய இந்த விளையாட்டு, ஒவ்வொரு மாறுதல்களாக சந்தித்து, தற்போதைய விதிமுறைகளை எட்டியிருக்கிறது



     இந்த விளையாட்டு மன்னர்கள் காலத்தில், ‘அரசர்களின் விளையாட்டு’ என்று சொல்லப்பட்டது. இது இருவர் மட்டுமே விளையாடும், பலகை விளையாட்டு ஆகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. இரு தரப்பினரின் காய்களும், வெவ்வேறு இரண்டு நிறங்களில் கருப்பு, வெள்ளை என அமைந்திருக்கும். 64 கட்டங்களைக் கொண்டு, சதுர வடிவில் பலகையின் அமைப்பு இருக்கும். 64 கட்டங்களும் கருப்பு, வெள்ளை என்று மாறி மாறி அமைக்கப்பட்டிருக்கும்.


         சதுரங்கப் போட்டிகள் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்படும் சுற்றுப் போட்டிகளாகவும் நடக்கின்றன. மாவட்டம், மாநிலம், தேசியம், சர்வதேசம் என்ற அளவில் இந்தப் போட்டிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. 


        இந்த சதுரங்கப் போட்டியை ஒழுங்குபடுத்துவதற்காக, 1924-ம் ஆண்டு, ஜூலை 20-ந் தேதி ‘உலக சதுரங்க கூட்டமைப்பு’ பாரீஸ் நகரில் நிறுவப்பட்டது. பின்னர் இது ‘பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு’ என்று மாறியது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு நிறுவனமாகும். இது பிரெஞ்சு மொழியில் ‘பீடே’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 150-க் கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பு 1966-ம் ஆண்டில், அமைப்பு தொடங்கப்பட்ட ஜூலை 20-ந் தேதியை ‘சர்வதேச சதுரங்க தினம்’ என்று அறிவித்தது. அதன்படி ஒவ்வொறு ஆண்டும், ஜூலை 20-ந் தேதி ‘உலக சதுரங்க தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

சதுரங்கம் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் :

1. மூளை வளர்ச்சி:

     சதுரங்கம் பயிலும் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி விரைவாக இருக்கிறது. இது Dendrites என்கின்ற மூளைப்பகுதியின் வளர்ச்சியை தூண்டுவதாக சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


2. IQ மட்டத்தை அதிரிக்கின்றது.

        சில ஆய்வுகள் chess விளையாடும் மாணவர்களின் IQ மட்டமானது, ஏனைய மாணவர்ளின் IQ மட்டத்தை விட அதிகமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.


3.படைப்பாற்றலை (creativity) அதிகரிக்கின்றது

     இந்த விளையாட்டு சிந்திக்கும் ஆற்றலை அதிகரித்து பல கோணங்களில் ஆராயும் திறனை அதிகரிப்பதன் மூலம் படைப்பாற்றலை அதிகரிக்கின்றது.


4.தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றலை அதிகரிக்கின்றது.

         சதுரங்க விளையாட்டின் போது குறிப்பிட்ட நேர இடைவெளியில் யோசித்து பல தீர்மானங்களை எடுக்க நேரிடும். இந்த ஆற்றல் பின்னர் வாழ்கையில் சந்திக்கும் சவால்களை குறித்தான தீர்மானங்ளை எடுக்க உதவும்.


5. ஞாபக சக்தியை அதிகரித்தல்.

       சதுரங்கம் பயிலும் போது பல நுணுக்கங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள பழகுவதால் காலப்போக்கில் ஞாபகசக்தி அதிகரிக்க உதவி புரிகின்றது.


6. தலைமைத்துவ பண்பை அதிகரித்தல்.

       தீர்மானம் மேற்கொள்ளும் திறனுடன், பல சதுரங்க சுற்றுப்பயணங்களில் பங்கேற்பதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிப்பதன் விளைவாக தலைமை தாங்கும் ஆற்றல் அதிகரிக்கின்றது.


Pages