ஒரு காலத்தில் ஜப்பானில் ஒரு துறவி இருந்தார். அவர் எங்கே சென்றாலும் கையில் ஒரு சிறு கண்ணாடியை எடுத்துச் செல்வார். இதைப் பார்த்த அவரது சிஷ்யர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டார்கள். நம் குருநாதருக்குத் தான் பெரிய அழகன் என்ற எண்ணம் இருக்கிறது. எப்போதுமே கண்ணாடியில் தன் முகத்தைத் தானே பார்த்து ரசிச்சுகிட்டு இருக்கிறார்.
சிஷ்யர்கள் இப்படி பேசுவது குருநாதருக்கும் தெரியும் ஆனால் அவர் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ஒருநாள், அந்த ஜென் துறவியைப் பார்க்க ஓர் அரசன் வந்திருந்தார். அவன் ஆசிரமத்தினுள் நுழைந்தபோது, துறவி வழக்கம்போல் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதைக் கவனித்த அரசனுக்கு ஆச்சர்யம், ஐயா, நீங்கள் எல்லாவற்றையும் துறந்த முனிவர் ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் தவிர்க்க முடியவில்லையா..? என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.
துறவி அதற்கு சிரித்தார் "அரசரே, எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால், அந்தப் பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கண்ணாடியைப் பார்ப்பேன்."
"அங்கே தோன்றும் உருவம்தான் என்னுடைய தலைவலிக்கு முதல் காரணம் என்று புரிந்துகொள்வேன்! அப்புறம், அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டாமா..? அதைச் செய்வதற்குப் பொருத்தமான நபர் யார் என்று தேடுவேன், மறுபடியும் கண்ணாடியைப் பார்ப்பேன்."
"அங்கே தோன்றும் உருவம்தான் இந்தத் தலைவலியைத் தீர்க்கக்கூடிய மருந்து என்று புரிந்துகொள்வேன். எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால் என்னுடைய நல்லது, கெட்டதுகளுக்கு யார் காரணம் என்கிற உணர்வை நான் மறப்பதில்லை", என்றார்.
Mirror Secret..!!
Once was a monk in Japan. He would carry a small mirror in his hand wherever he went. Seeing this, his disciples talked to themselves and laughed. Our Guru Nath has the idea of being a great handsome man. He is always looking at his face in the mirror.
Guru Nath knew the disciples were talking about him like this but he did not change his habit. One day, a king came to see the Zen monk. As he entered the ashram, the monk was looking at his face in the mirror as usual.
The king was surprised to see this and asked directly, Sir, you are a sage who has renounced everything but can not avoid the desire to look in the mirror so often..?
The monk laughed at that O king if I have any problem I will look in this mirror to know who is the cause of that problem.
I understand that the image that appears there is the first cause of my headache! Then, we have to find a solution to solve that problem..?? So I will look for the right person to do it and look in the mirror again.
I understand that the image that appears there is the cure for this headache. He said I will never forget the feeling of who is responsible for my good and bad because I always have this glass with me.