சாலைப் பாதுகாப்பில் குழந்தைகளின் பங்கு!
நடந்து செல்லும்போது :
🛣நடைபாதையில் மட்டுமே செல்ல வேண்டும். நடைபாதைகள் இல்லாத சாலைகளில் இடது ஓரமாக நடந்து செல்ல வேண்டும்.
🛣சாலைகளில் வேகமாக செல்வதோ, ஓடுவதோ கூடாது.
🛣சாலைகளை கடப்பதற்கு என குறிக்கப்பட்ட கருப்பு வெள்ளை கட்டமிடப்பட்ட இடங்களில், நடை மேம்பாலங்கள், போக்குவரத்து கட்டுப்பாட்டு சமிக்ஞை உள்ள இடங்கள் போன்றவற்றில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும்.
🛣போக்குவரத்து கட்டுப்பாட்டு விளக்குகள் உள்ள இடங்களில் பச்சை விளக்கு எரிந்தால் மட்டுமே சாலையை கடக்க வேண்டும். போக்குவரத்து காவலர் உள்ள சாலையை கடக்கும் இடங்களில் அவரின் இசைவுக்கேற்ப சாலைகளை கடக்க வேண்டும்.
🛣ஒருவழிப் பாதைகளை கடக்கும்பொழுது வாகனவகைக்கேற்ப ஒதுக்கப்பட்ட எல்லா வழிகளிலும் வாகனங்கள் செல்லாமல் இருக்கும் பொழுதே கடக்க வேண்டும்.
🛣திருப்பங்களிலோ, வளைவுகளிலோ ஒருபோதும் சாலையை கடக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் பார்க்க இயலாது.
🛣சாலையை ஓடிக்கடக்க முயற்சிப்பது தவறானதாகும். ஏனெனில் அவ்வாறு செல்லும் பொழுது தவறி கீழே விழ வாய்ப்புள்ளது. அது பெரும் அபாயத்தை விளைவிக்கும்.
பள்ளி வாகனத்தில் கடைபிடிக்க வேண்டியவைகள் :
🚌பேருந்து நிலையத்தில் வரிசையாக நின்று ஒருவர் பின் ஒருவராக வரிசையாக பேருந்தில் ஏற வேண்டும்.
🚌பேருந்தில் பயணிக்கும் பொழுது சத்தமிடுவதோ, கூக்குரலிடுவதோ கூடாது. அது ஓட்டுநரின் கவனத்தை சிதறடிக்கும்.
🚌சிக்னலில் வாகனம் நிற்கும்பொழுது ஏறவோ இறங்கவோ கூடாது.
🚌பேருந்தின் படிக்கட்டுகளில் உட்கார்ந்தோ, நின்று கொண்டோ பயணிக்கக் கூடாது.
🚌பேருந்தில் பயணிக்கும் பொழுது கை, கால், தலையை வெளியே நீட்டக்கூடாது.
பாதுகாப்பாக ஓட்டுவோம்! பிறரையும் பாதுகாத்து ஓட்டுவோம்!