மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 17 July 2021

மனிதனை அச்சத்தில் உறைய வைத்த... க்ரூய்நார்ட் தீவு..!



      நாம் வாழும் இந்த பூமியில் அதிகமான அதிசயங்களும், மர்மங்களும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைந்து இருக்கிறது. இந்த வியக்கத்தக்க இடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்தால் உண்மையில் இப்படி இருக்கிறதா என்று நமக்குள் ஒரு புரியாத புதிர் உண்டாகும்.

      அந்த வகையில் மனிதர்கள் இந்த தீவிற்கு செல்வதற்கு பயப்படுகிறார்கள். என்ன காரணமாக இருக்கும்? வாருங்கள் அந்த தீவில் உள்ள மர்மங்களைப் பற்றி பார்க்கலாம்.

க்ரூய்நார்ட் தீவு :

     மனிதர்களை அச்சத்தில் உறைய வைக்கும் இந்த தீவு ஸ்காட்லாந்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. க்ரூய்நார்ட் தீவு ஓவல் வடிவத்தில் அமைந்திருக்கும். இங்கு செல்வதற்கு அனுமதி இருக்கும் நிலையிலும் மனிதர்கள் யாரும் செல்வதில்லை. அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த தீவிற்கு மனிதர்கள் செல்வதற்கு தைரியம் இல்லை என்பதுதான் உண்மை.


    இந்த தீவு உலகப்போரின் போது, ராணுவ ஆராய்ச்சியாளர்கள் ரசாயன ஆயுதங்களை பரிசோதனை செய்து வந்த இடமாக கூறப்படுகிறது. க்ரூய்நார்ட் தீவில் வீரியம் மிக்க ஆந்தராக்ஸ் பரிசோதனை செய்த பிறகு அந்த இடமே ரசாயன தீவாக மாறியது. இந்த சோதனை மூலம்தான் அந்த தீவானது பாழாய்போனது என்று சொல்கிறார்கள்.


       இங்கு பல ஆடுகளைக் கொண்டு வந்து பல சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். பல ஆய்வுகள் செய்த பின்பு இந்த தீவு மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான இடம் என்று அரசு உத்தரவிட்டப் பிறகு மனிதர்கள் காலடி எடுத்து வைப்பதற்கு நடுங்குகின்றனர் என்பதால் இது மர்மத் தீவாகவே இருக்கிறது. சோதனைகள் முடிந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் க்ரூய்நார்ட் தீவு அச்சம் நிறைந்த இடமாகவே திகழ்ந்து வருகிறது.


Pages