மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 24 July 2021

முல்லாவின் வயது.. சிரிப்பு கதைகள்..

 


முல்லாவின் நண்பர் ஒருவர் "முல்லா அவர்களே! உங்களுடைய வயது என்ன?" என்று கேட்டார். அதற்கு முல்லா, "என் தம்பியை விட எனக்கு மூன்று வயது அதிகம்" என்று கூறினார்.


நண்பருக்கு முல்லாவின் தம்பியை நன்றாக தெரியும். " சென்ற வருடம் தங்களின் தம்பியைக் கேட்டபோது, அவரை விட நீங்களு இரண்டு வயது அதிகம் என்று கூறினாரே?" என்று நண்பர் கேட்டார்.


"என் தம்பி தங்களிடம் கூறியதை நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். போன வருடம் நான் தம்பியை விட இரண்டு ஆண்டுகள் மூத்தவன். இப்போது ஓராண்டு கழிந்து போன பிறகும் அப்படியே இருக்க முடியுமா? அதனால் இப்போது நான் மூன்று ஆண்டுகள் மூத்தவன் " என்று விளக்கினார் முல்லா.


இதைக்கேட்ட அவர் நண்பர் தலையைப் பிய்த்து கொண்டார்.


Pages