மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 20 July 2021

நட்புனா எப்படி இருக்க வேண்டும்? மனதைத் தொடும் கதை..!




       ஒருமுறை வேலு என்பவர் ராஜாவை எதிர்த்தார், அதற்காக அவரை கைது செய்து தூக்கிலிட ராஜா உத்தரவிட்டார். வேலு அந்த உத்தரவை எதிர்க்காமல், 'எனக்கு சிறிது நேரம் கொடுங்கள், இறப்பதற்கு முன்பு என் வீட்டிற்கு சென்று வருகிறேன்" என்றார்.


       ராஜா அதை மறுத்து, 'இல்லை, என்னால் அதை அனுமதிக்க முடியாது.. நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை" என்றார் ராஜா. கூட்டத்தில் இருந்து ஒரு மனிதன் முன்னோக்கி வந்து, 'அவருக்கு பதிலாக என்னை கைது செய்யுங்கள், அவர் திரும்பி வர வில்லை என்றால் என்னை தூக்கிலிடுங்கள்" என்றான்.

        ராஜா ஆச்சரியப்பட்டு 'ஏன் நீ இவ்வாறு கூறுகிறாய்? என கேட்க, 'அவன் என்னுடைய நெருங்கிய நண்பன், நான் அவரை நம்புகிறேன்" என்றார். அதற்கு பிறகு லியாம் அவனுடைய குடும்பத்தாரை சந்திக்க ஆறு மணி நேரம் கொடுத்தார்.

      வேலு அவனுடைய குடும்பத்தாரை சந்தித்து விட்டு திரும்பி வரும்போது, குதிரையிலிருந்து கீழே விழுந்து தாமதமாகிவிட்டது. மறுபுறத்தில், அவரது நண்பர் தூக்கிலிடப்படும் பலகையில் நின்று கொண்டிருந்தார். தனது நண்பரை தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக, 'தயவுசெய்து நிறுத்துங்கள்.. நான் திரும்பி வந்து விட்டேன். தயவுசெய்து என் நண்பனை விடுதலை செய்யுங்கள்" என்றார் லியாம். உடனே அவனது நண்பன் 'வேலு.. நீ திரும்பி சென்று விடு, நானே தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்" என்றான்.

         இதைக் கேட்ட வேலு அருகில் சென்று, 'உன்னுடைய உதவிக்கு நன்றி. இப்போது தயவுசெய்து நீ செல். இது எனக்கான தண்டனை, நான் தான் அதை எதிர்கொள்ள வேண்டும்" என்றார். ராஜா அவர்களின் நட்பை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு, 'நான் உங்களை மன்னித்து விட்டேன்.. உங்கள் நட்பு என்னில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.. நீங்கள் இருவரும் இனி செல்லலாம்" என்று கூறினார்.

நீதி : உண்மையான நட்பு பல சிக்கல்களைத் தவிர்த்து விடும்.


Taking Friend′s Place..!!

          Once a man name Velu protested against King, and he was arrested and sentenced to hang. "Velu didn′t resisted and said, Please give me some time, Before dying I just want to visit my home".

         King refused and said, "No, I can′t allow it. There is no guarantee that you will return back" Just then a man from the crowd came forward and said, "Please arrest me instead of him and if he doesn′t comes back that you can hang me instead of him."

        King was surprised and asked "Why are you saying this?" That man replied, "He is my best friend and I trust him". King gave six hours for Velu to meet his family.

       While Velu returning, on his way he fell from his horse and got delayed. On another side, his friend was standing on board to be hanged. Just a moment before, Velu came running, and shouted, "Please stop". I am back. Please release my friend. His friend replied, "Velu... You go back. I will accept the sentence".

       Listening to this Velu went close to his friend and said, "Thanks for your help. Now please go. This is my punishment and I should face it." King was excited by their friendship and said, "I forgive you. your friendship made a deep impact on me. You both are free to go.."

Moral : True friendship can even avert many Problems.

Pages