மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 25 March 2022

தவறை எப்போது திருத்த வேண்டும்? ஜென் கதை!



       ரவியும், ராகேஷும் நண்பர்கள். இருவருமே படிப்பில் மிகுந்த கெட்டிக்காரர்கள். ரவிக்கு ஒருநாள் ஜென் துறவியை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தது.


ரவி அந்த எண்ணத்தை ராகேஷிடம் கூறினான். 

       நாம் இருவரும் ஜென் மகானைச் சந்தித்து அவரிடம் அறிவுரை கேட்போமே.

ஆகா! நல்ல யோசனை. நாளையே சென்று பார்க்கலாம்.

     மறுநாள் நண்பர்கள் இருவரும் ஜென் துறவியைக் காணச் சென்றனர்.

     ஏய்..! ரவி, மகானிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவரை கூறினான் ராகேஷ்.

சரி, நண்பா! - என்றான் ரவி.

இருவரும் துறவியைச் சந்தித்து வணங்கினர். 

" எங்களுக்கு நல்ல அறிவுரை சொல்லுங்கள். மகானே!"

       அதற்கு ஜென் துறவி, " உங்களுக்கு என் வாழ்த்துகள். " எனக்கூறி அவர்களை ஆசிர்வதித்தார். மேலும் சில அறிவுரைகளுக் கூறினார். கடைசியில் " நல்லது. நீங்கள் போய் வாருங்கள்" என்றார்.

       அப்போது, திடீரென ரவி ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டான். தன் சட்டையைக் கழற்றி, திருப்பி சரியாக அணிந்து கொண்டான். ராகேஷுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஜென் துறவி எதையும் கண்டு கொள்ளவில்லை. அவனைப் பார்த்து புன்னகை செய்தார்.


    ஐயோ, என்ன காரியம் செய்கிறான்? என ராகேஷ் மனதில் நினைத்துக் கொண்டான். அதன்பின், இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். உடனே ராகேஷ் கோபத்துடன், 

      "ஏய்.. முட்டாளே! அவ்வளவு பெரிய துறவிக்கு முன்னால் மரியாதை இல்லாமல் சட்டையை ஏன் கழற்றினாய்?" என்றான்.

    அதற்கு ரவி பொறுமையுடன், "என் சட்டையை தவறுதலாக திருப்பி அணிந்திருந்தேன். அப்போதுதான் கவனித்தேன். உடனே கழற்றி சரியாக அணிந்து கொண்டேன்" என்றான். 

     "அதை சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவுடன் செய்திருக்கலாமே? யாருக்கு என்ன தெரியப் போகிறது? " என்றான் ராகேஷ்.

        " ஆனால் என் மனதுக்கு தெரியுமே!  ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தால், அதை உடனே சரி செய்ய வேண்டும். தயங்கினாலோ அல்லது தள்ளிப் போட்டாலோ மனசு மாறிவிடும். பின் அது உங்களை வாட்டி வதைக்கும். என்று குரு சொன்னதை நீ கேட்கவில்லையா? " என்றான் ரவி.

அப்போதுதான் ஜென் தத்துவம் ராகேஷுக்குப் புரிந்தது.


நீதி: யதார்த்தமாய் இருப்பதே நல்லது. தவறை உடனே திருத்திக் கொள்ள வேண்டும்.

     மேலும் பல கதைகள் படிக்க... கீழேயுள்ள லிங்கைக் கிளிக் செய்யவும்..

www.alamaravizhuthugal.net



Pages