மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 20 July 2021

சாலையின் நடுவே உள்ள கோடுகள் நமக்கு சொல்வது என்ன?

 


         நாம் சாலையில் பயணம் செய்யும் போது சாலையின் நடுவில் கோடுகள் வரையப்படுடு இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? கோடுகள் ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தவாறு வரையப்படுடு இரீக்கீம். அவற்றின் பொருள் என்ன என்பதை அறியலாம் வாருங்கள்......


1. மத்தியில் உள்ள இடைவிடப்பட்ட வெள்ளைக் கோடு:

             இது சாலையின் அடிப்படைக் குறியீடு ஆகும். இக் குறியீடு உள்ள இடத்தில்சாலையின் தடம் மாறலாம். வாகனங்களை முந்தி செல்லலாம். பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் U திருப்பத்தில் திரும்பலாம்.


2. தொடர்ச்சியான வெள்ளைக்கோடு : 

       இவை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் காணப்படும். வாகனங்களை முந்தவோ, தடம் மாறவோ அனுமதி கிடையாது. இடதுபுறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.


3. தொடர்ச்சியான மஞ்சள் கோடு: 

         வெளிச்சம் குறைவான பகுதிகளில் உள்ள சாலைகளில் இந்த கோடுகள் இருக்கும். வாகனங்களை முந்தி செல்லலாம். இடதுபுறம் மட்டுமேஏ வாகனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை இக்கோடுகள் குறிக்கிறது.


4. இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள்: 

         ஆபத்தான மற்றும் இருவழி போக்குவரத்து உள்ள சாலைகளில் இந்த கோடுகள் வரையப்பட்டு இருக்கும். இது தடம் மாறுவதைக் கண்டிப்பாகத் தடைசெய்கிறது. மேலும் நாம் செல்லும் தடத்திற்குள்ளாக வாகனங்களை முந்தி செல்லலாம்.


5. நிறுத்தக் கோடு: 

       பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன்பாக இந்த கோடுகள் வரையப்பட்டிருக்கும். அவை போக்குவரத்துச் சமிக்ஞைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டிய பகுதியைக் குறிக்கிறது.


6. தொடர்ச்சியான மற்றும் இடைவிடப்பட்ட கோடுகள்:

 இடைவிடப்பட்ட கோட்டின் பக்கமாக வாகனம் செல்லும் போது பிற வாகனங்களை முந்திச் செல்லலாம். ஆனால் தொடர்ச்சியான  கோட்டின் பக்கமாக வாகனம் செல்லும் போது பிற வாகனங்களை முந்தி செல்ல முயற்சிக்கக் கூடாது.


Pages