பல சுதந்திர போராட்ட வீரர்களின் இரத்தத்தால் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விலகி இந்தியா ஒரு தனி நாடாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைய நாளை இந்திய மக்கள் அனைவரும் தமக்கு சுதந்திரம் கிடைத்த சுதந்திர நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் அரசுவிடுமுறை அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும். இந்தியப்பிரதமர் புதுதில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி, சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடுவது ஒவ்வொரு இந்தியனது கடமை. அன்றைய நாளில் ஒவ்வொரு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகிய இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் பாடப்பட்டு இனிப்பு வழங்கி தமது சுதந்திரத்தை மக்கள் கொண்டாடுவார்கள்.
இந்நாளில் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் நமது நாட்டின் ஒற்றுமையையும் வளத்தையும் பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு நடத்துவர். இந்த அணிவகுப்பில் ராணுவ ஊர்திகள், ஏவுகணைகள் அணிவகுத்து வரும் காட்சி உள்ளத்தில் தேசப்பற்றைப் பெருக்கெடுக்க செய்யும். அன்று சுதந்திரபோராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து மரியாதையும் செலுத்தும் ஒரு உத்தம நாள்.