மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 20 August 2021

ஒரே நகைச்சுவை... ஒரே பிரச்சனை...




           There was a monk in a village. All the people in the village came and complained to the monk about the same problem. One day he told a joke to those people and everyone there laughed.

          A few minutes later, he repeated the same joke and only a few of them laughed. He told the same joke a third time, and now no one is laughed.

          The monk laughed and asked, "You can′t laugh at the same joke over and over again, but why do you cry over and over again thinking of the same problem?" Everyone there began to think about it.

Moral : Worrying will never solve your problem. It will waste your time and energy.


         ஒரு கிராமத்தில் ஒரு துறவி ஒருவர் இருந்தார். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் வந்து துறவியிடம் ஒரே பிரச்சனையை பற்றி புகார் கொடுத்தனர். ஒரு நாள் அவர் அந்த மக்களிடம் ஒரு நகைச்சுவை கூறினார், அங்கிருந்த அனைவருமே சிரித்தார்கள்.

        சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் அதே நகைச்சுவையை மறுபடியும் கூறினார் அவர்களில் சிலர் மட்டுமே சிரித்தார்கள். அவர் மூன்றாவது முறையாக அதே நகைச்சுவையை கூறினார், இப்போது யாரும் சிரிக்கவில்லை.

          துறவி சிரித்துக் கொண்டே 'உங்களால் ஒரே நகைச்சுவைக்கு மீண்டும் மீண்டும் சிரிக்க முடியவில்லை, ஆனால் ஏன் நீங்கள் ஒரே பிரச்சனையை நினைத்து மீண்டும் மீண்டும் அழுகிறீர்கள்?" என்று கேட்டார். அங்கிருந்த அனைவரும் அதை பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

நீதி : கவலைப்படுவது ஒரு போதும் உங்கள் பிரச்சனையை தீர்த்து விடாது. அது உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணாக்கும்.

Pages