புகழ்பெற்ற துறவி ஒருவரின் போதனை கூட்டம் அது. அவரது சீடர்கள் மட்டுமின்றி, பல நாட்டு மக்கள், மன்னர்கள் என அனைவரும் அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு இருந்தனர்.
திடீரென, குறும்புக்காரன் ஒருவன் எழுந்து, "ஏய் கிழவா! உங்களுக்கு நாடே கீழ்ப்படிந்து நடக்கலாம். ஆனால் என்னை போன்ற மரியாதை என்றால் என்னவென்று தெரியாத திமிர்பிடித்தவர்களை உங்களால் கீழ்ப்படிய வைக்க முடியுமா?" என்றான்.
உடனே துறவி புன்னகை மாறாமல் "முடியுமே! இப்படி அருகில் வாருங்கள். செய்து காட்டுகிறேன்." என்றார்.
நேராக வந்தவுடன் "இப்படி வலதுபுறம் வாருங்கள்!", என்றார். வலதுபுறம் வந்தவுடன் "இப்படி இடதுபுறம் வந்தால், செய்து காட்ட வசதியாக இருக்கும்.", என்றார்.
இடதுபுறம் வந்தவுடன் "நான் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கிறீர்கள். மிகவும் நல்லவராக தான் இருக்கிறீர்கள். சென்று அமர்ந்து போதனையை கேளுங்கள்.", என்றார் துறவி.
கூட்டமே கைக்கொட்டி சிரித்தது. கர்வம் அழிந்து அமைதியாய் உட்கார்ந்தான் குறும்புக்காரன்.
நீதி: ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு