மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 1 August 2021

இன்று பிள்ளைகளுக்கு வண்ணப் புத்தகங்கள் பரிசளியுங்கள்...



      வீட்டுச்சுவர்களில் வெள்ளை சாக்பீசால் படம் வரைவது, கரிதுண்டால் கிறுக்குவது, நக பாலீஷால் கோடு கிழிப்பது, ஈர கையை சுவரில் பதிப்பது முதல், புத்தகங்களின் வெள்ளைத்தாளில் வண்ணம் தீட்டுவது இவையெல்லாம் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல். 


      சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சுவரில், வெள்ளைத்தாளில் வண்ணம் தீட்டினாலும், கிறுக்கினாலும் அவர்களைத் தடுப்பதில்லை. அவன் இஷ்டம் போல கிறுக்கட்டும். குழந்தைகள் உள்ள வீடு என்றால் அப்படித்தான் இருக்கும் என்பார். பல மனவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதைக் குறிப்பிடுகின்றனர். அதனால் தற்போது இது மிகவும் நல்ல விஷயமாக, ஆரோக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது. 

      அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற பொது நல நோக்கில் வருடம்தோறும் ஆகஸ்டு மாதம் 2-ந் தேதியை தேசிய வண்ணப் புத்தகங்கள் தினமாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் தங்கள் குழந்தைகளுக்கு வண்ணப் புத்தகங்கள் வாங்கி பரிசளித்து அவர்களை மகிழ்விக்க வேண்டியது பெற்றோரின் கடமை. 


          வண்ணம் தீட்டும் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்து என்று உளவியல் மருத்துவர்கள் சொல்கிறார்கள். சொற்களால் வெளிப்படுத்த முடியாதவற்றை வண்ணம் தீட்டுவதால் வெளிப்படுத்தலாம். 

         பச்சை வண்ணத்தைப் பார்க்கும்போது நமது மனம் புத்துணர்வு பெறுகிறது. நீல வண்ணம் குளிர்ச்சி தருகிறது. சிவப்பு வண்ணம் துணிச்சல் தரும். மஞ்சள் வண்ணம் தன்னம்பிக்கை தரும் குறியீடாக கருதப்படுகிறது. ஊதா வண்ணம் தியானத்திற்கு உகந்த வண்ணம். ஆரஞ்சு வண்ணம் செயல்திறனை தூண்டும். வெள்ளை வண்ணம் தூய்மையான தன்மைக் கொண்டது. சாம்பல் வண்ணம் சோம்பல் தரும். சமையல் அறைக்கும், குளியலறைக்கும் சிவப்பு நல்லது. வரவேற்பு அறைக்கு மஞ்சள், உணவு உண்ணும் இடத்திற்கு நீலம், உடல் பயிற்சி செய்யும் இடத்திற்கு ஆரஞ்சு வண்ணமும், படுக்கை அறையில் இளம் சிவப்பு வண்ணம் ஏற்றது. ஆக வண்ணங்களால் ஆனது வாழ்க்கை. நல்ல எண்ணங்களையும், நல்ல வண்ணங்களையும் ஏற்று நல்வாழ்வு வாழ்வோம்..

Pages