மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 5 August 2021

நிலவில் முதலில் தடம்பதித்தவர் பிறந்ததினம் இன்று



        நிலாவில் முதன்முதலில் கால் தடம்பதித்த விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அமெரிக்காவின் ஒஹியோ மாநிலம் வாபகெனெட்டா நகரில் பிறந்தார்.


         இவர் 6 வயதில் தந்தையுடன் விமானத்தில் பயணிக்கும் போதே விமானம் ஓட்டும் ஆசை வந்துவிட்டது. தனது 16 வயதிலேயே விமான ஓட்டுநர் உரிமம் பெற்றார்.


       1962ஆம் ஆண்டு நாசா விண்வெளி திட்டத்தில் இணைந்தார். அங்கு டெஸ்ட் பைலட், கமாண்ட் பைலட், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.


      1969ஆம் ஆண்டு மைக்கேல் காலின்ஸ், எட்வர்ட் ஆல்ட்ரின் ஆகியோருடன் நிலாவில் இறங்கும் திட்டத்தில் சேர்க்கப்பட்டார். இந்த பயணத்தின்போது தான் இவர் முதன் முதலாக நிலவில் காலடி எடுத்து வைத்தார். அப்போலோ-11 விண்கலத்தின் குழுத் தலைவராக விண்வெளிக்குச் சென்றார்.


      ஏராளமான பல்கலைக்கழகங்களில் கௌரவ டாக்டர் பட்டம், பிரசிடென்ட் மெடல் ஆஃப் ஃப்ரீடம், அமெரிக்க நாடாளுமன்ற தங்கப் பதக்கம், ஸ்பேஸ் கௌரவப் பதக்கம், சிறந்த பணிக்கான நாசா விருது போன்ற பல பரிசுகள், விருதுகளை பெற்றுள்ளார்.


           இவரது வாழ்க்கை வரலாற்று நூலான 'ஃபர்ஸ்ட் மேன் : த லைஃப் ஆஃப் நீல் ஏ.ஆம்ஸ்ட்ராங்" 2005ஆம் ஆண்டு வெளிவந்தது. வானியல் ஆராய்ச்சிகளில் வாழ்நாள் இறுதிவரை ஆர்வம் கொண்டிருந்த இவர் 2012ஆம் ஆண்டு மறைந்தார்.முக்கிய

Pages