மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 1 August 2021

கனவைத் தெளிவாகப் பார்க்க... முல்லா கதை

 


    ஒருநாள் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முல்லா திடீரென்று விழித்துக் கொண்டார்.


    அருகில் தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை அவசர அவசரமாக எழுப்பினார்.

    பதறி எழுந்த முல்லாவின் மனைவி, "நடுராத்திரியில் ஏன் எழுப்பினீர்கள்?" என்றார்.

      அதற்கு முல்லா பதறாமல், " நான் தூங்கும்போது ஒரு அற்புதமான கனவு கண்டேன். ஆனால், அதில்வரும் காட்சிகள் மங்கலாகத் தெரிகின்றன. நீ போய் எனது மூக்குக் கண்ணாடியை எடுத்து வா! அதைப் போட்டுக் கொண்டு படுத்தால் காட்சிகள் தெளிவாகத் தெரியுமே!" என்றார்.

மனைவி சொல்வதறியாது திகைத்து நின்றார்.

.............................................

முல்லாவின் தோட்டத்திற்குள் ஒரு மாடு நுழைந்து பயிர்களை மேய்ந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்துவிட்ட முல்லாவிற்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. ஒரு கம்பால் அடித்து விரட்டினார்.


அடிபட்ட மாட்டின் சொந்தக்காரன் கோபத்தோடு முல்லாவிடம் வந்து "எதற்காக மாட்டை அடித்தீர்கள்? " என்று கேட்டான்.

அதற்கு முல்லா "இது எனக்கும் அந்த மாட்டிற்கும் இடையேயுள்ள பிரச்சினை. இதில் நீ தலையிட வேண்டாம். நான் ஏன் அடித்தேன் என்பது அந்த மாட்டிற்குத் தெரியும். உனக்கு தெரிய வேண்டூம் என்று அவசியமில்லை" என்றார்


இந்த பதிலைக் கேட்ட மாட்டுக்காரன் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.


Pages