மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 7 August 2021

என்னை நம்பு... முல்லா கதைகள்.

 


         முல்லா அவர்களின் கழுதையை இரவல் பெற்றுச் செல்வதற்காக அவரது நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் முல்லா ஏற்கெனவே ஒருவருக்குக் கழுதையை இரவல் கொடுத்துவிட்டதாகக் கூறினார்.


     அந்த நண்பர் புறப்படும் நேரத்தில் வீட்டின் பின்புறம் தோட்டத்திலிருந்து கழுதை கத்தும் சத்தம் கேட்டது. உடனே அந்த நண்பர் முல்லாவிடம், " முல்லா அவர்களே! கொல்லையில் கழுதை கத்தும் சத்தம் கேட்கிறதே" என்று கூறினார்.


        அதற்கு முல்ல், "என் பேச்சை நம்பாமல் அற்பமான கழுதையின் குரலை நம்பும் உமக்கு என்னிடம் இருந்து இரவல் வாங்கும் தகுதியே இல்லை." என்று மறுத்துப் பேசிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.


நண்பர் அடுத்த வார்த்தை பேச முடியாமல் திகைத்து நின்றார்.


மேலும் பல சுவையான கதைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்..

www.alamaravizhuthugal.net/story



Pages