மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 20 August 2021

உலக கொசு ஒழிப்பு தினம்




        இன்று உலக கொசு ஒழிப்புத் தினம் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் மருத்துவர் 1897 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் பெண் கொசுக்கள் கடிப்பதால்தான் மனிதர்களுக்கு மலேரியா ஏற்படுகிறது என்று அறிவித்தார். இந்த உலக கொசுக்கள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் மக்களுக்கு மலேரியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான்.

      முதன் முதலில் உலக கொசுக்கள் தினம் 1879 ஆம் ஆண்டு ரோனால்டு ரோஸ் என்பவரால் கொண்டுவரப்பட்டது. பல ஆராய்ச்சிக்கு பின்னர் மலேரியா மக்களுக்கு கொசுக்களின் ஒட்டுண்ணிகள் மூலம் மக்களுக்கு பரவுகிறது என்பதை நிரூபித்தார். இதற்காக 1902ல் மருத்துவ நோபல் பரிசு வழங்கப்பட்டது.


         சின்ன சிறிய கொசுக்களினால் மனிதர்கள் பல வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சிலர் இறக்கவும் நேரிடுகிறது. பெண் கொசுக்கள் தான் மனிதர்களின் உடல்களில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சுகிறது. ஆண் கொசுக்கள் இரத்தத்தை உறிஞ்சுவதில்லை.


     அமெரிக்க கொசு கட்டுப்பாட்டு சங்கத்தின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 3,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான கொசுக்கள் உள்ளன. ஆனால், உலகில் இருக்கும் கொசுக்களிலே மிக மோசமான மூன்று கொசுக்கள் உள்ளன. அவை, மலேரியாவைப் பரப்பும் 'அனோபிலஸ்' கொசு, டெங்கு மற்றும் சிக்குன் குனியாவை பரப்பும் 'ஏடிஸ்' கொசு மற்றும் யானைக்கால் நோயைப் பரப்பும் கியூலக்ஸ் கொசு ஆகும்.


    கொசுக்கள் பொதுவாக 80 டிகிரி வெப்பநிலையை மட்டுமே விரும்புகிறது. அதனால் தான் குளிர்பனி காலங்களில் கொசுக்கள் குறைந்து விடுகின்றன. 

    தண்ணீர் குடம் மற்றும் பானைகளை முடிவைக்க வேண்டும். வீட்டினை சுற்றி தண்ணீர் மற்றும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய பாட்டில்கள், கேன்கள், டயர்கள் இருந்தால் தூக்கி எரிந்து விடுங்கள். அவற்றில் தண்ணீர் தேங்கினால் கொசுக்கள் முட்டையிடும். மேலும் தூங்கும் போது கொசுவலை பயன்படுத்துங்கள். ஜன்னல்களில் கொசுவலை பயன்படுத்துவது நல்லது. சுத்தமான தண்ணீர் பருகுங்கள் அல்லது கொதிக்க வைத்த தண்ணீர் பருகுவது மிக நல்லது.

Pages