1. பூஜையின் போது பட்டு எதற்கு அணிகிறார்கள்?
பட்டுக்கு மின்காந்த சக்தியை ஈர்க்கும் மற்றும் வெளியிடும் ஆற்றல் உள்ளது. நம் உடலுக்கும், நாம் உடுத்தி இருக்கும் பட்டு உடைக்கும் இருக்கின்ற நிலையான உராய்வு மின்காந்த சக்தியை உருவாக்கும். ஆற்றல் உருவாகுவதால் மன அமைதி ஏற்படும். அதனால்தான் பூஜையின் போது பட்டு அணிகிறார்களாம்.
2. பால் இனிப்பாக இருக்கிறது ஆனால் தயிர் ஏன் புளிப்பாக இருக்கிறது?
பாலில் லாக்டோஸ் (Lactose) என்ற சர்க்கரை உள்ளது. இந்த சர்க்கரையின் காரணமாக பால் இனிப்பாக இருக்கின்றது. ஆனால் இது தயிராக மாற்றும்போது லாக்டோபாகிலஸ் பாக்டீரியா லாக்டோஸை, லாக்டிக் அமிலமாக (Lactic acid) மாற்றுகிறது. இந்த அமிலம் காரணமாக தயிர் புளிப்பாக உள்ளது.
3. ஏன் இரு கைகளைக் கூப்பி வணக்கம் சொல்கிறார்கள் என்று தெரியுமா?
இருகைகளை ஒன்று சேர்க்கும்போது உடலுக்கு ஒருசக்தி கிடைக்குமாம். அவை என்னவென்றால்,
சுண்டுவிரல் இரண்டும் ஒன்றுசேரும்போது மனச்சோர்வை நீக்கவும்,
மோதிர விரல் இரண்டும் ஒன்றுசேரும்போது செயல்பாட்டை அதிகரிக்கவும்,
நடுவிரல் இரண்டும் ஒன்றுசேரும்போது நம்மை அதிகம் மெருகேற்றவும்,
ஆள்காட்டி விரல் இரண்டும் ஒன்றுசேரும்போது தனிப்பட்ட ஆன்மாவையும்,
கட்டைவிரல் இரண்டும் ஒன்றுசேரும்போது இறுதி ஆத்மாவையும் குறிப்பிடுகின்றது.
அதற்காகதான் இரு கைகளைக் கூப்பி வணக்கம் சொல்கிறார்கள்.
4. திருமணத்தின்போது ஒற்றை எண்ணில் அதாவது 101, 501, 1001 என மொய் வைப்பதற்கான காரணம் என்ன?
அதாவது ஒற்றை எண்ணை நம்மால் எப்போதும் பிரிக்க முடியாது. அதேபோல் மணமக்கள் அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் பிரியாமல் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர்களை வாழ்த்தி ஒற்றை எண்ணில் மொய் வைக்கிறார்கள்.
5. துளசி செடியை வணங்குவதற்கான காரணம் என்ன?
துளசி இலை மருத்துவ குணம் உடையது. அச்செடி சளியை நீக்குவது மட்டுமின்றி, அதிக antibiotic-யையும் கொண்டது. நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. வீட்டில் துளசி செடி வைப்பது கொசு, பூச்சி ஆகியவற்றை விரட்டிவிடும். பாம்பு வருவதை தடுக்கும் தன்மையை கொண்டது. துளசி செடியை வணங்குவதறான காரணம் இதுதான்.