ஒரு செல்லந்தரிடம் ஒரு நல்ல காரியத்திற்காக நன்கொடை பெறுவதற்காக முல்லா சென்றார். முல்லா வருவதைப் பார்த்துவிட்ட செல்வந்தர், உள்ளே சென்று மறைந்து கொண்டார். 'தான் இல்லை' என்று கூறும்படி வேலைக்காரனிடம் சொல்லிவிட்டார்.
வாசலுக்கு வந்த முல்லா வேலைக்காரனிடம் செல்வந்தனைப் பார்க்க க்ஷேண்டும் என்று கூறினார். அவனோ, "முதலாளி வீட்டில் இல்லை. வெளியில் சென்றுள்ளார்" என்று கூறினான்.
அதற்கு முல்லா, "அப்படியா! இனிமேல் உங்கள் முதலாளி வெளியில் செல்லுமாபோது மறக்காமல் அவருடைய தலையையும் கொண்டு போகச் சொல். ஏனென்றால் நான் வரும்போது உன் முதலாளியின் தலை ஜன்னல் ஓரமாக இருந்ததைப் பார்த்தேன். இந்த செய்தியை உன் முதலாளி வந்ததும் கூறிவிடு" என்று கூறிவிட்டு வெளியேறினார்.
உள்ளே ஒளிந்திருந்த முதலாளி பரிதாபமாக அசடு வழிந்து கொண்டிருந்தார். பார்க்க ரொம்பப் பரிதாபம்.
In english:
Mulla went to a charity to get a donation for a good cause. The rich man saw the cartoon coming, went inside and disappeared. He told the servant to say 'No'.
Mulla told the servant who came to the door that he wanted to see the rich man. Avano said, "The boss is not home. He has gone outside."
Mulla replied, "Yes! Now tell your boss to take his head with him when he goes out, because when I came I saw your boss' head was on the side of the window. Tell this news when your boss comes."
The boss who was hiding inside was miserably overflowing. Too pathetic to look at.
www.alamaravizhuthugal.net
ஆலமரவிழுதுகள்.நெட்