இன்று ... செப்டம்பர் 1 . உலக கடித தினம்.
கடிதம் என்பது சுகமான அனுபவம். இன்றைய நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலத்தில் தகவல்களை சுமந்து சென்றது கடிதங்கள்தாம்..
நம்முடைய அனுபவங்களையும், அன்பையும் வெளிபடுத்தியது கடிதம்தான். பல இரகசியங்களை தன்னுள் அடக்கி வைத்ததும் கடிதம்தான். கடிதம் எழுதுவதில் ஒரு தனி சுகம் இருக்கும். தபால்காரர் நமக்கு ஏதேனும் கடிதம் கொண்டு வந்து தரமாட்டாரா? என ஏங்கிய காலங்களும் உண்டு.
உலக கடித தினம் என்பது, ஆஸ்திரேலியாவைச் சார்ந்த ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பழைய நினைவுகளை அசை போடுவது மனதிற்கு ஒரு இதமான இன்பத்தைத் தரும்.
இன்றைய நாளில் கடிதம் வருகிறது என்றாலே .. அது வியப்பான விசயமாக உள்ளது. உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதிப் பாருங்களேன்...
இனிய உலக கடித தின வாழ்த்துகள்....!