Best Friends Story
Long Ago in a village lived two friends Ram and Sundar. Raman was from a wealthy family but Sundar was from a poor family.
One day, Sundar got very ill, When Raman came to know about he went to Sundar's house to meet him. He didn't stay there for long, but instead, he just took some money out of his pocket and gave it to his friend and left.
Sundar felt very bad but didn't said anything to him. With time Sundar got well and worked hard to earn money so that he could return Raman's money. Once Sundar earned enough money. He went to Raman to return his money. Still, Sundar couldn't forget how rude was Raman's behavior toward him. Just after some time, Raman got ill and the doctor suggested him bed rest.
As soon as Sundar got News of Raman's illness, he left all his work as it is and went to meet Raman and stayed by his side until Raman got all well. After this, one day Raman went to meet Sundar and said, "My friend, I feel very guilty. When you fell ill I gave you money and you returned it.
But when I got ill, you stayed by my side whole time and took care of me, How am I ever going to be able to return this favor of yours..?" Sundar hugged him and replied, "I just wanted you to realize that money is not everything and today I am very happy that you understand that..'
பணம் மட்டும் போதுமா?
நீண்ட காலத்திற்கு முன்பு, ஒரு கிராமத்தில் ராமன் மற்றும் சுந்தர் என்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ராமன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆனால் சுந்தரோ ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ஒருநாள் சுந்தர் நோய்வாய்ப்பட்டிருந்தார், இதை அறிந்த ராமன் சுந்தரை சந்திக்க அவன் வீட்டிற்கு சென்றார். அவர் நீண்ட நேரம் அங்கு இருக்கவில்லை, அதற்கு பதிலாக அவர் தனது பாக்கெட்டிலிருந்து சிறிது பணத்தை எடுத்து தன்னுடைய நண்பரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இதைக் கண்டு சுந்தர் மிகவும் வருந்தினார், ஆனால் அவரிடம் எதையும் கூறவில்லை. சுந்தர், உடல்நிலை சரியாகி பின்னர் ராமனின் பணத்தை திரும்பி கொடுக்க கடுமையாக உழைத்தான். பணத்தை சம்பாதித்த பிறகு ராமனிடம் சென்று அவரது பணத்தை திருப்பிக் கொடுத்தான். இருப்பினும் ராமன் நடந்து கொண்ட விதத்தை சுந்தரால் மறக்க முடியவில்லை. சிறிது நாட்கள் கழித்து, ராமன் நோய்வாய்ப்பட்டார் மற்றும் மருத்துவர் அவரை ஓய்வெடுக்க கூறினார்கள்.
சுந்தருக்கு ராமன் நோய்வாய்ப்பட்டிருப்பது பற்றிய செய்தி வந்தவுடன், அவருடைய அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு ராமனை சந்திக்க சென்றார், அங்கு ராமனின் உடல்நிலை சரியாகும் வரை அங்கேயே தங்கினான்.
இதற்கு பிறகு, ஒரு நாள் ராமன் சுந்தரை சந்திக்க சென்று, அவரிடம் "என் நண்பரே, நான் மிகவும் குற்ற உணர்வுடன் வருந்துகிறேன்'. நீ நோய்வாய்ப்பட்டிருந்தபோது நான் உனக்கு பணம் கொடுத்தேன் நீ திருப்பி கொடுத்துவிட்டாய்.ஆனால் நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, நீ நாள் முழுவதும் என்னுடன் இருந்து என்னை நன்றாக பார்த்துக்கொண்டாய், நான் எப்படி உன்னுடைய இந்த உதவியை திரும்பித் தர முடியும்?' என்றார்.
சுந்தர் அவரை கட்டிப்பிடித்து, "பணம் தான் எல்லாம்' என்ற உன்னுடைய எண்ணத்தை மாற்ற விரும்பினேன், இன்று நீ "பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல' என்பதை புரிந்து கொண்டாய் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, என்று சுந்தர் பதிலளித்தான்.