மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 4 September 2021

ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும்


     அரிஸ்டாட்டில் ஒருசமயம் தனது மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தார். வழியில் ஆற்றை கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆற்றை நீந்தி கடக்க அரிஸ்டாட்டில் ஆயத்தமானார். அப்போது அவரது மாணவர்களில் ஒருவர், " குருவே, சற்று பொறுங்கள். நான் ஆற்றில் நீந்தி சென்று சுழல்கள் ஏதேனும் உள்ளதா என பார்த்து வருகிறேன்." என்று கூறிவிட்டு ஆற்றில் நீந்தி சென்று வந்தார்.


         வந்தபின், "குருவே, தற்போது நாம் செல்லலாம். சுழல்கள் ஏதுமில்லை." என்றார்.


      அரிஸ்டாட்டில், "நான் ஆற்றில் நீந்தும்போது சுழலில் சென்றுவிட்டால் என்னவாகிவிடும். இதற்காக நீ ஏன் இவ்வளவு சிரமப்பட்டாய்." என்றார்.


       அதற்கு அந்த மாணவன், "குருவே, இந்த அலெக்ஸாண்டர் சுழலில் சென்றுவிட்டால்.. என்னைப் போல ஆயிரம் அலெக்ஸாண்டரை உங்களால் உருவாக்க முடியும். ஆனால் நீங்கள் சுழலில் சென்றுவிட்டால், உங்களைப் போன்ற குரு எங்களுக்குக் கிடைக்கமாட்டார். ஆயிரம் பேரை உருவாக்கக் கூடிய ஆற்றல்மிக்க குருவை இழந்துவிடுவோம்." என்றார்.


ஆசிரியர் மாணவர் உறவு இப்படி இருக்க வேண்டும்.


         Aristotle once went with his students. On the way there was the situation of having to cross the river. Aristotle prepared to swim across the river. Then one of his students said, "Guru, wait a minute. I'm going to swim in the river and see if there's any loops." After saying that, he swam in the river.


Upon arrival, "Guru, we can go now. No loops." said.


       Aristotle said, "What would happen if I went into a whirlpool while swimming in a river. Why did you bother so much for this?" said.


        To which the student replied, "Guru, if this Alexander goes in a spiral .. you can create a thousand Alexander like me. But if you go in a spiral we will not get a guru like you. We will lose a powerful guru who can create a thousand." said.


The teacher-student relationship should look like this.

Pages