வாயினால் சுவாசிக்காமல்... மூக்கினால் சுவாசிக்க வேண்டும் என்பது ஏன்?
மூக்கினாலும், வாயினாலும் உள் எடுக்கப்படும் காற்று நுரையீரலை அடைய முடியும். எனினும், வாயினால் அன்றி மூக்கின் வழியாக உட்சுவாசிப்பது உடல்நலத்திற்கு ஏற்றது. மூக்கினால் உட்சுவாசிக்கும் பொழுது மூக்கினுள் உள்ள மயிர்கள் தூசிகளைத் தடுப்பதுடன், மூக்கின் உட்சுரக்கப்படும் சீதம் காற்றில் உள்ள தூசுளை உட்செல்ல விடாமல் தடுக்கிறது.
மூக்கின் வழியாக காற்று செல்லும் பொழுது, உடல் வெப்பநிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. அத்துடன் மூக்கு மணத்தை அறியும் அங்கமாகவும் இருப்பதால் அசுத்தமான காற்றை உட்சுவாசிக்காமல் இருக்க இது உதவும்.
ஒரே நிலையில் நாம் கைகளையோ அல்லது கால்களையோ வைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவை மரத்துப்போவது ஏன்?
நமது கைகளையோ அல்லது கால்களையோ சிறிது நேரம் ஒரே நிலையில், குறிப்பாக எதன் மீதாவது அழுத்திய நிலையில் வைத்துக்கொண்டிருந்தால், அப்பகுதி மரத்துப்போவது உண்மையே. இதற்குக் காரணம் என்னவென்றால், அவ்வாறு நீண்ட நேரம் அழுத்தப்பெறும் குறிப்பிட்ட அப்பகுதியில் ரத்த ஓட்டம் தடைபட்டு, நரம்புகள் செயல்பாட்டைத் தற்காலிகமாக இழந்து விடுகின்றன.
இதன் விளைவாக தொடு உணர்ச்சி இழக்கப்பெற்று, மரத்துப்போகும் நிலை அப்பகுதிகளில் உண்டாகிறது. இத்தகைய நிலை தற்காலிகமானதுதான். அப்பகுதிகளில் அழுத்தம் நீங்கப்பெற்றவுடன், அதாவது கை, கால்களை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தவுடன், ரத்த ஓட்டம் சீரடைந்து சிறிது நேரத்தில் சாதாரண உணர்வைப் பெறமுடிகிறது.
Why breathe through the nose ... without breathing through the mouth?
Inhaled air through the nose and mouth can reach the lungs. However, inhaling through the nose rather than through the mouth is good for health. When inhaled through the nose, the hairs inside the nose block dust and the mucus inhaled through the nose prevents dust from entering the air.
As air passes through the nose, it is brought to body temperature. As well as being a part of the nose odor detection helps to avoid inhaling polluted air.
If we keep our hands or feet in the same position, why do they become numb after a while?
It is true that if we keep our hands or feet in the same position for a while, especially when pressed against something, the area will become numb. The reason for this is that the blood flow in the specific area that is pressed for such a long time is blocked and the nerves temporarily lose their function.
The result is a loss of sense of touch and numbness in the area. Such a situation is temporary. Once the pressure in those areas is relieved, i.e. the arms and legs are brought back to normal, the blood flow normalizes and you can feel normal for a while.