மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 29 September 2021

மூக்குப்பொடி உணர்த்திய தத்துவம்


         விநோதமான கேள்விகளை அரசவையில் கேட்பது அக்பருக்கு வழக்கம். பலமுறை அமைச்சர்கள் அவரது கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் திணறினர். 


     ஒருநாள் அக்பர் வழக்கமாக "ஒருவர் பரிசுகளை வழங்கும் போது பரிசினை வழங்குபவரது கை, பெறுபவரது கையின் மேலே உள்ளது. எப்போது பரிசு பெறுபவரது கை வழங்குபவரது கைகளுக்கு மேலே இருக்கும் என்று யாராவது கூறமுடியுமா?" என வினவினார். 

        யாருக்கும் இதன் விடை தெரியவில்லை. எல்லோரும் பலமாக எவ்வளவு யோசித்தும், எப்போது பெறுபவரது கை பரிசு வழங்குபவரது கைக்கு மேலே இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கம் போல் அனைவரும் பீர்பால் இதற்குப் பதிலளிப்பார் என எதிர்பார்த்திருந்தனர். அக்பரும் பீர்பாலின் பதிலை எதிர்பார்த்தார். 

        "உங்களது கருத்து என்ன? இவ்வாறு நடைபெற இயலுமா?" என மன்னர் கேட்டார்.  "இயலும் பாதுஷாவே" பீர்பால் பதிலவித்தார். "எங்கே? எப்படி?" என அக்பர் கேட்டார்.

      "ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை எடுக்கும் போது பெறுபவரது கை கொடுப்பவரின் கைக்கு மேலே இருக்கும்" என்று பீர்பால் பதில் சொன்னார். அவையில் அனைவரும் பீர்பாலின் விரைவான சிந்தனைத் திறமையைப் பாராட்டினார்கள்



     It is customary for Akbar to ask strange questions in court. Several times ministers were unable to answer his questions. 

     One day Akbar used to ask, "When someone gives a gift, the hand of the giver is above the hand of the recipient. Can anyone tell when the hand of the recipient of the gift is above the hand of the giver?" 

      No one knows the answer. Everyone was thinking hard and could not figure out when the recipient's hand would be above the giver's hand. As usual everyone was expecting Birbal to respond to this. Akbar also awaited Birbal's response. 

     "What is your opinion? Is this possible?"  The king asked, "Yes, Padusha." Birbal replied, "Where? How?" Akbar asked. "When a pinch of nose powder is taken, the recipient's hand is above the giver's hand." All of them praised Birbal's quick thinking skills...

Pages