ராகேஷ் தனது சிறு மூளையை கசக்கி பிழிந்து கடவுளைக் கண்டுவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.
" கடவுளை காண வேண்டும் என்றால் , துறவியின் உதவியை நாட வேண்டும்." என்று யாரோ சொல்ல , அதனை வேத வாக்காக கொண்டு துறவியைத் தேடினான்.
அப்போது, துறவி ஒருவர் ஆற்றின் கரை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
ராகேஷ்ஓடிபோய் துறவியின் முன்னால் நின்றான். " குருவே ! கடவுளைக் காணும் வழியை சொல்லிக் கொடுங்கள் !" என்றான்.
"ஏனப்பா இவ்வளவு அவசரம். திடீரென்று கடவுளைப் பார்க்க வேண்டிய கட்டாயம் என்ன?" என்று துறவி கேட்டார்.
"அதெல்லாம் சொல்லமுடியாது . நான் கடவுளை இன்றே, இப்போதே பார்க்க வேண்டும்." என்றான் ராகேஷ்.
"அப்படியா ! தண்ணீருக்குள் இறங்கி வா ! வழியைச் சொல்கிறேன் /" என்றார் .
ராகேஷ் ஆர்வமுடன் ஆற்றில் இறங்கினான்.
துறவி, சடாரென ராகேஷின் முடியைப் பிடித்து அப்படியே நீரில் அமுக்கினார்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ராகேஷ் பயத்தில் உறைந்து போனான் .நீரினுள் மூச்சுவிட முடியாமல் துடித்தான்.
துறவி சிறிது நேரத்தில் தண்ணீரில் அமுக்கி வைத்திருந்த ராகேஷின் தலையை விட்டார்
உயிர் பிழைத்ததே அதிசயம் என்று பதறிய ராகேஷ் , " குருவே. கடவுளைக் காணும் வழி தெரியவில்லை என்றால் சொல்லி இருக்கலாமே. அதற்காக இப்படியா கொலை செய்ய முயற்சி செய்வது ?" என்று கேட்டான்.
"தண்ணீருக்குள் இருக்கும்போது உடனே உனக்கு தேவையாக எது இருந்தது?" எனக் கேட்டார்.
"சுவாசிக்கக் காற்று உடனே தேவையாக இருந்தது." என்றான் ராகேஷ்.
" தண்ணீருக்குள் இருக்கும்போது காற்று எவ்வளவு அவசியம் தேவையோ .... அந்த அளவிற்கு கடவுள் தேவை என்றால் மட்டும் வந்து என்னை பார்." என்கிறார் துறவி.
அதன்பின் கடவுளைக் காணும் வழியை யாரிடமும் ராகேஷ் கேட்பதே இல்லை.
நீதி: கடவுளை தேடி அலைவது பக்தி அல்ல. கடவுள் உன்னை தேடும்படி வாழ வேண்டும் . அதுவே சிறந்த பக்தி.
Rakesh squeezes his little brain and decides to find God.
"If you want to see God, you have to seek the help of a monk." To say that, he took it as a scripture and sought the monk.
At that time, a monk was walking along the river bank.
Rakesh ran away and stood in front of the monk. "Guru! Tell me the way to see God!" Said.
"Why is it so urgent. What is the compulsion to see God suddenly?" Asked the monk.
"That's all I can say. I need to see God today, right now." Said Rakesh.
"Well! Come down into the water! I'll tell you the way."
Rakesh eagerly went down to the river.
The monk grabbed Sadarena Rakesh's hair and squeezed it into the water.
Unexpectedly, Rakesh froze in fear, unable to breathe.
The monk let go of Rakesh's head which had been squeezing in the water for a while
Rakesh wondered if the survival was a miracle. He asked.
"What did you need right away when you were in the water?" He asked.
"I needed air to breathe immediately." Said Rakesh.
"Come and see me only if God needs as much air as you need when you are in the water ...." Says the monk.
After that Rakesh never asked anyone for a way to see God.
Justice: Wandering in search of God is not devotion. You have to live as God seeks you. That is the best devotion.