குச்சி விளையாட்டு...!!
இந்த விளையாட்டு மிகவும் கவனத்துடன் விளையாடக்கூடிய விளையாட்டாகும். இந்த விளையாட்டை இரண்டு நபர்கள் விளையாட வேண்டும்.
இதற்கு ஒரே அளவில் 10 குச்சிகள் மற்றும் சற்று நீளமான குச்சி ஒன்று தேவை. விளக்குமாறில் உள்ள சீவக்குச்சிகளை ஒரே அளவில் 10 குச்சிகளை எடுத்துக்கொள்ளவும். அதன்பின் இக்குச்சிகளைவிட சற்று நீளமுள்ள குச்சி ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
இந்த 11 குச்சியையும் ஒரு சேர பிடித்து அவற்றை தரையில் ஒரே வீச்சில் எறிய வேண்டும். அல்லது உள்ளங்கையால் உருட்டியும் போடலாம். பின் கீழே விழுந்துக்கிடக்கும் குச்சிகளை ஒவ்வொன்றாக அசையாமல் அலுங்காமல் எடுக்க வேண்டும். அலுங்காமல் எடுத்த குச்சிகள் வெற்றிப்புள்ளிகளாக எடுத்துக்கொள்ளப்படும். அப்படி குச்சி எடுக்கும்போது அலுங்கினால் ஆட்டம் கைமாறும். அடுத்தவர் அந்த ஆட்டத்தை தொடர்வார்.
இதில் பெரிய குச்சியை எடுத்தால் 10 புள்ளிகள் கிடைக்கும். இவ்வாறு புள்ளிகள் கணக்கிடப்பட்டு கூட்டிக்கொள்ள வேண்டும். இதில் யார் அதிக புள்ளிகள் பெற்றாரோ அவரே வெற்றியாளர் ஆவார்.
விளையாட்டின் பயன்கள் :
இவ்விளையாட்டு பொறுமையை வெளிப்படுத்த உதவுகிறது.
விரல் நடுக்கத்தை குறைக்கும்.